Department of Justice, U.S.

(அமெரிக்க அரசின்) நீதித் துறை

தமிழ் விளக்கம்

அமெரிக்க (மத்திய) அரசின் சட்டங்களை அமுல்படுத்துவதைக் கண்காணிப்பது, அரசின் விசாரணை / புலனாய்வு அமைப்புகளை நிர்வகிப்பது, அமெரிக்க அதிபருக்குச் சட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை சொல்வது, அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்காடுவது, மைய அரசின் தண்டனைக் கூடங்களைக் கண்காணிப்பது போன்ற பொறுப்புக்களை நிறைவேற்ற 1870 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு, அமெரிக்க சட்டமா அதிபரின் (Attorney General அரசு தலைமை வழக்கறிஞர்) தலைமையில் செயல்படும் துறை. மேலகண்ட பொறுப்புகளோடு போதைப்பொருள் அமலாக்கப் பிரிவு
(Drug Enforcement Administration DEA), குடிவரவு மற்றும் குடியுரிமைத் துறை (Immigration and Naturalization Service INS), மத்திய புலனாய்வுத் துறை (Federal Bureau of Investigation) மற்றும் நன்னடத்தை ஆணையப் (U.S. Parole Commission) பொறுப்புக்களையும் கவனித்து வருகின்றது.
குற்றவியல் நீதி அமைப்பு - சட்டவிரோத நடத்தைகளில் ஈடுபடுபவர்களைக் தடுத்தல், கட்டுப்படுத்தல், அவர்களின் குற்றங்களை விசாரித்துத் தண்டனை வழங்கல், சிறையிலடைத்தல், அவர்கள் விடுதலையான பின் (மீண்டும் அவ்வாறு நடக்கவிடாமல்) மறுவாழ்வு அளித்தல், தேவையான திட்டங்கள், கொள்கைகள் வகுத்தல், அதைச் செயல்படுத்தத் தேவையான சமூக, அரசியல் மற்றும் சட்ட நிறுவனங்களை ஏற்படுத்துதல், அதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகளின் தொகுப்பை குற்றவியல் நீதி அமைப்பு என்கிறோம்.

English

The federal agency established in 1870 and headed by the Attorney General, whose primary mission is to enforce all federal laws, administer the nation's law enforcement and investigation system, advise the president in legal matters, argue suits involving the U.S. government in the Supreme Court, and supervise federal penal institutions. This department includes the Drug Enforcement Administration (DEA), the Immigration and Naturalization Service (INS), the Federal Bureau of Investigation, and the U.S. Parole Commission.