dependency

சார்புநிலை, பிறர் ஆதரவின் கீழ் இருத்தல்

தமிழ் விளக்கம்

இது பல பொருளில் உபயோகப்படுத்தப்படும் வார்த்தை 1. தூண்டலற்ற, முன்னெடுப்பு இல்லாத பிறரைச் சார்ந்திருக்கும் நிலை, 2. பிறருக்குக் கீழ்ப்படிந்து வாழும் வாழ்க்கை 3. பிற அரசு அல்லது நிர்வாகத்தின் கீழ் ஆட்சி செய்யப்படும் பிரதேசம் அல்லது காலனி 4. ஏதாவது ஒரு பொருளை (போதை) உபயோக்கிக்கும் பழக்கத்தைச் சார்ந்திருத்தல் / அடிமையாதல். சமூகப்பணியில் உயிர் வாழ்வதற்கும் அதற்காக போஷிக்கப்படுவதற்கும், தங்குமிடத்திற்காகவும், பிற வகையில் பாதுகாக்கப்படுவதற்கும் பிறரைச் சார்ந்திருக்கும் நிலை. இந்த சார்புத்தன்மை அதிகமாகும் போது உளக்கோளாறுகள், வளர்ச்சி தடைபட்டுப் பின்னடைதல், உணர்வுப் பாதுகாப்பினமை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

English

A state of reliance on other people or things for existence or support; a tendency to rely on others to provide nurturance, make decisions, and provide protection, security, and shelter. When reliance becomes excessive, it is a symptom of neurosis, regression, or emotional insecurity.