dependent personality disorder
சார்ந்திருக்கும் ஆளுமைச் சீர்கேடு
தமிழ் விளக்கம்
பதினொரு வகையான ஆளுமைச் சிக்கல்களில் ஒருவகை தனித்தியங்க முடியாத சார்ந்திருக்கும் ஆளுமைச் சீர்கேடு. இச் சீர்கேடுடையவர்கள் செயலற்றவர்களாகவும், பிறரால் ஆதிக்கம் செலுத்தப்படுபவர்களாகவும், மற்றவர்களின் கைப்பாவையாகவும் இருப்பர். பதினொரு வகையான ஆளுமைச் சிக்கல்களாவன 1. சந்தேக ஆளுமை (Paranoid personality disorder) , 2. மனப்பிளவு ஆளுமை (Schizoid personality disorder), 3.மிகு மனப்பிளவு ஆளுமை (Schizotypal personality disorder), 4. சமூகவிரோத ஆளுமை (Antisocial personality disorder), 5. ஸ்திரமற்ற ஆளுமை (Borderline personality disorder), 6. நாடகப்பங்கான ஆளுமை (Histrionic personality disorder), 7. தற்பூசனை (தற்காதல்) ஆளுமை (Narcissistic personality disorder), 8. தவிர்க்கும் ஆளுமை (Avoidant personality disorder), 9. சார்ந்திருக்கும் ஆளுமை (Dependent personality disorder), 10. அலைபாயும் ஆளுமை (Obsessive-compulsive personality disorder), 11. நோயினால் ஏற்படும் ஆளுமை மாற்றம் (Personality change due to another medical condition), 12. மேற்சொன்ன எந்த வகையிலும் அடங்காத ஆளுமை (Personality disorder not otherwise specified).
English
One of the 11 personality disorders, in which the individual is generally passive in most relationships, allows others to assume responsibilities, lacks self-confidence, feels helpless, and tends to tolerate abusiveness from others. See also passive–dependent.