deregulation
கட்டுப்பாடு நீக்கம், விதிகளைவு, விதிகளைத் தளர்த்துதல்
தமிழ் விளக்கம்
அரசு அனுமதி பெற்று, தொழில்கள் மற்றும் சேவைகள் தொடங்கப்படவேண்டுமென்ற அரசின் விதிமுறை. இதை இந்தியாவில் லைசென்ஸ் ராஜ் என்பர். 1947 முதல் மற்றும் 1990 களுக்கு இடையிலான காலத்தில் தொழில் துவங்க மற்றும் நடத்த அரசிடம் அனுமதி (லைசென்ஸ்) பெறவேண்டும். இந்தக் கட்டுப்பாடுகளால் சிவப்பு நாடா முறை பெருகி, லஞ்சம் ஊழலுக்கு வழிவகுத்து. பொருளாதார வளர்ச்சி தேக்க நிலை கண்டது. இதைப் போக்கி பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்த, 1990 க்கு பிறகு, அரசு பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையைக் கடைபிடிக்க ஆரம்பித்தது. அதன்படி பல செயல்களின் மீதான அரசு கட்டுப்பாடுகள் தளர்ந்தன.
English
The reduction or cessation of government control over the operations of various industrial, governmental, professional, or other organizations. The policy of deregulation in the 1980s led to significant changes in the airline industry, railroads and trucking, and financial institutions.