DeShaney decision
டி சேனி (DeShaney) வழக்கு
தமிழ் விளக்கம்
குழந்தைகளின் பராமரிப்பு பற்றி அமெரிக்க உச்சநீதி மன்றம் வழங்கிய பரபரப்பான தீர்ப்பு. விவாகரத்து பெற்ற ஜோசுவா டி சாணியிடம் (Joshua DeShaney) பிறந்து ஒருவருடமேயான அவருடைய மகனின் பராமரிப்பு ஒப்படைக்கப்பட்டது. அந்தக் குழந்தை சரியாகப் பராமரிக்கபடவில்லை என்று புகார் வந்ததையொட்டி, குழந்தை பாதுகாப்புக் குழுவினர் குழந்தையை மருத்துவமனை கண்காணிப்பில் விட, இந்த முடிவை உள்ளூர் நீதிமன்றம் ரத்து செய்து, குழந்தையைத் தந்தையின் பாதுகாப்பில் விடும்படியும், மாநில அரசின் சார்பாக சமூகப்பணியாளர் ஒருவர் தொடர்ந்து கண்காணிக்கும்படியும் உத்தரவிட்டது. சமூகப்பணியாளரின் கண்காணிப்பில், தந்தையின் பராமரிப்பில் இருந்த குழந்தை தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாக வந்த செய்தியையொட்டி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டபோது, குழந்தை தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்தது தெரியவர, இதைத் தொடர்ந்து, அந்தக் குழந்தையின் தாய் தொடுத்த வழக்கில், மாநில அரசின் கண்காணிப்பில் இருந்த குழந்தை துன்புறுத்தப்பட்டதால், மாநில அரசும், சமூகப்பணியாளரும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சுமத்த, தந்தையின் பாராமரிப்பில் இருந்த குழந்தையின் துன்பத்திற்குச் சமூகப்பணியாளர் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டியதில்லை என்று அமெரிக்க உச்சநீதி மன்றம் தீர்ப்பை வழங்கியது. சமூகப்பணியாளர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதில் தவறிழைத்தால் அவர்கள் நீதிமன்றங்களுக்கு பதில் சொல்லவேண்டும் என்ற நிலை இந்த வழக்கிலிருந்து தெளிவாகின்றது.
English
The 1988 U.S. Supreme Court ruling (DeShaney v. Winne-bago County Department of Social Services) that the social workers and their social agency could not be held liable for damages for failure to protect a child who had been abused by the father. The ruling does not, however, mean that social workers employed in child protective services (CPS) are free from the risk of lawsuits at the state court level; moreover, they may still be at risk at the federal level.