deterrence
அச்சமூட்டிச் செயலூக்கங் கெடு, குற்றங்களைத் தடுத்து நிறுத்துவது, இடர்களைச் சுட்டிக்காட்டி தயங்கும்படி செய்வது, பின்னடையும்படி செய், தயக்கமுண்டுபண்ணித் தடு .
தமிழ் விளக்கம்
தண்டனை பெறவேண்டிவரும் என்று அச்சுறுத்தியோ வேறு வகையிலோ குற்றங்களைச் செய்யாமல் தடுப்பது. இதில் இரண்டு நிலைகளுண்டு. குற்றங்களின் தன்மைக்கேற்றவாறு தண்டனை உண்டு என்று உறுதிபடச் சொலவதன் மூலம் குற்றங்களைத் தடுப்பது. இரண்டாவதாக, தண்டனை பெற்றவர்களைப் பார்த்து குற்றமிழைக்கத் தயங்கச் செய்வது. பெரும்பாலான ஜனநாயக நாடுகளின் குற்றவியல் நீதி முறை தண்டனையையும், சிறைவாசத்தையும் குற்றவாளிகளைச் செயழிலக்கச் செய்து, அச்சுறுத்தி குற்றம் புரியாமல் தடுக்க உபயோகிக்கப்படுகின்றது. தண்டனை முறை பெரும்பாலும் குற்றவாளிகளை அச்சுறுத்தவே பயன்படுகிறது. 'குற்றத்தின் மீது கடுமை காட்டுவது' 'குறைந்தபட்ச தண்டனை' 'நியாயமான தண்டனை' 'மூன்று தவறுகள் மூச்சிருக்கும் வரை உள்ளே' போன்ற கருத்தாக்கங்கள் குற்றம் புரிய எத்தனிப்பவர்களுக்குக் கிடைக்கும் அச்சுறுத்தல் சமிக்ஞை.
English
In the judicial system, a policy that uses fear of restraint and punishment to attempt to discourage crime.