developing countries
வளரும் நாடுகள்
தமிழ் விளக்கம்
வேளாண்மையை முக்கியப் பொருளாதாரச் செயலாகக் கொண்ட குறைந்த தனிநபர் வருமானமுள்ள நாடுகள். தொழிமயமாதலின் மூலம் பொருளாதார முன்னேற்றமடைய முயலும் நாடுகள். வளர்ந்துவரும் நாடுகள் எனப்படுபவை குறிப்பிட்ட சில அளவுகளின்படி குறைந்த வளர்ச்சித் தரத்தைக் காட்டும் நாடுகளாகும். வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள் என்பவற்றை வேறுபடுத்திக் காட்ட உலகளவில் ஒரு தனியான பொருத்தமான வரைவிலக்கணம் அறியப்படாமல் இருப்பதனால், வளர்ச்சித் தரம் மிகவும் வேறுபட்டு அறியப்படுகின்றது. சில வளர்ந்துவரும் நாடுகள் உயர் சராசரி வாழ்க்கைத்தரத்தை கொண்டுள்ளன. ஏனைய வளர்ந்துவரும் நாடுகளை விட மேம்பட்ட பொருளாதாரத்தைக் கொண்டிருப்பினும், முழுமையாக வளர்ந்த நாடுகளில் ஒன்று என்பதை எடுத்துக் காட்ட முடியாத நாடுகள், புதிய சொல்லான புதிதாக தொழில் மயமாதலுக்கு உட்படும் நாடுகள் என அழைக்கப்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளரான கோபி அன்னான் 'வளர்ந்த நாடு என்பது தன் நாட்டு மக்கள் அனைவரும், சுதந்திரமான வளமான ஒரு வாழ்க்கையை வாழக் கூடிய பாதுகாப்பான சூழல் / சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நாடாகும்' என்று விளக்கியிருக்கின்றார். ஐக்கிய நாடுகள் அவையின் புள்ளிவிபரவியல் பிரிவானது, வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகளை வேறுபடுத்திக் காட்டும் சரியான வரைமுறையைக் கொண்டிருக்கவில்லை. மேலும் இவ்வகையான வளரும் நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள் என்ற பிரிவானது புள்ளியியல் விபரங்களை இலகுவாக்கவேயன்றி, ஒரு நாடானது தனது வளர்ச்சி நோக்கிய பாதையில் என்ன நிலையில் உள்ளதென்பதைத் தீர்மானமாக நிச்சயித்துக் கூறுவதாக அமைய வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றது..

English
Nations with low per capita incomes and relatively small financial reserves that have worked to develop their natural resources, develop numbers of skilled and educated citizens, and aspire to economic and political parity with developed countries. Often called Third World countries, this category includes India, Brazil, Egypt, Nigeria, and Indonesia; not usually included are underdeveloped countries such as Bangladesh, Ethiopia, and Chad. See also Fourth World.