developmental disabilities
வளர்ச்சிக் குறைபாடுகள்
தமிழ் விளக்கம்
நோயாலோ, மரபணுக் குறைபாட்டாலோ அல்லது வளர்ச்சிக் குறைபாட்டாலோ, இளமைப் பருவத்திற்கு முன்னரே குழந்தைப் பருவத்திலே தெரிய ஆரம்பித்து, காலவரையறையின்றி தொடர்ந்து, வாழ்நாள் முழுவதும் பிரத்யேக கவனமும், சிகிச்சையும் தேவைப்படும் பல அறிகுறிகளின் தொகுப்பு. பெருமூளை வாதம், (cerebral palsy), மனநலிவு நோய் (Down's syndrome), வலிப்பு (epilepsy), மன வளர்ச்சி குன்றல் (mental retardation), மற்றும் மன இறுக்கம் (autism) போன்ற குறைபாடுகள் வளர்ச்சிக் குறைபாடுகள் என்று அறியப்படுகின்றன.
மனநலிவு நோய் (Down's Syndrome) பெரும்பாலான பிள்ளைகள் பிறப்பில் 23 ஜோடி குரோமோசோம்களை அதாவது நிறமிகளைக் கொண்டிருக்கிறார்கள். மிகப் பொதுவாகக் காணப்படும் மனநலிவு நோயில் ஒருவர், 21 வது குரோமோசோமின் வழக்கமான 2 பிரதிகளுக்குப் பதிலாக 3 பிரதிகளைக் கொண்டிருப்பார். கருப்பையில் கரு வளர்ச்சியடையும் மிக ஆரம்ப கட்டத்திலேயே இந்தத் தவறு ஏற்பட்டுவிடுகிறது. மனநலிவு நோய்க்கும், தாயின் முட்டைகளின் வயதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம். மனநலிவுள்ள எல்லாக் குழந்தைகளிலும் மூன்றில் ஒரு பங்கினர் 37 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கே பிறக்கின்றனர்.

English
A condition that produces functional impairment, as a result of disease, genetic disorder, or impaired growth pattern manifested before adulthood, likely to continue indefinitely, and require specific and lifelong or extended care. Some of the conditions classified as developmental disabilities include cerebral palsy, Down's syndrome, epilepsy, mental retardation, and autism.