developmental stages
வளர்ச்சியின் நிலைகள், முன்னேறு கட்டங்கள், உருவளர் நிலைகள்
தமிழ் விளக்கம்
ஒவ்வொரு பாடத்துறையிலும் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தபடும் வார்த்தை. உளவியலில் மனித வளர்ச்சி, அறிதல் வளர்ச்சி, அறநெறி வளர்ச்சிக் கட்டங்களையும், பொருளியலில் பொருளாதார வளர்ச்சிக் கட்டங்களையும், சமூகவியலில் சமூக கலாச்சாரப் பரிணாமக் கட்டங்களையும் குறிக்கும் சொல்லாகும். சமூகப்பணியில் பெரும்பாலும் இது மானுட வளர்ச்சிக் கட்டங்களையே குறிக்கின்றது. குறிப்பிட்ட கால இடைவெளியில், குறிப்பிட்ட பருவத்தில் கண்டுணரக்கூடியதான, ஊகித்தறியக்கூடியதான பலவிதமான உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களே வளர்ச்சியின் நிலைகள் எனப்படுகிறது.
English
The progression of physical and mental changes occurring over time and that result in clusters of identifiable and predictable characteristics tending to occur during specific periods.