DI

இயலாமைக்கான காப்பீடு

தமிழ் விளக்கம்

ஒரு தொழிலாளி காயமுற்றலோ, நோயுற்றாலோ, மன உளைச்சல் காரணமாகவோ, உடல் பலவீனத்தாலோ, தனக்களிக்கப்பட்ட வேலையைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு அவருடைய வருமானம் பாதிக்கப்படும் போது, சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, குறுகிய கால இயலாமைக் காப்பீடு, நீண்ட கால இயலாமைக் காப்பீடு போன்ற பலன்களை அளித்து அவருடைய வருமான இழப்பை ஈடு செய்வது. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு விநாடியும் யாரோ ஒருவர் இயலாமைக்குத் தள்ளப்படும் விபத்துக்களில் சிக்கிக் கொள்வதாகவும், நான்கில் ஒரு அமெரிக்கத் தொழிலாளி தன்னுடைய பணிக்காலத்தில் இயலாமை உண்டாகுமளவு காயமுறுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய 18.5% சதவீத அமெரிக்கத் தொழிலாளர்கள் ஏதாவதொரு இயலாமைக்கு உட்படுகிறார்கள்.

English

See disability insurance (DI).