diagnosis
வியாதி நிர்ணயம், ரோகக்குறி அல்லது நோய்க்குறியறிதல், நோய்ப் பகுப்பாய்தல், நோயறிதல், நோய் நாடல், குணங்குறி மூலம் நோயைக் கண்டறிதல்
தமிழ் விளக்கம்
பல்வேறு துறைகளில் பயன்படும் இந்த வார்த்தையின் பொதுவான விளக்கம் - ஒரு பிரச்சனையின் (சமூக ரீதியான, உளவியல் ரீதியான, உடல் ரீதியான) அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து, அவ்வாறு அறிய வந்த காரணத்தைக் கொண்டு அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் செயல்முறை. மருத்துவத்தில் இதை வியாதி நிர்ணயம், ரோகக்குறி அல்லது நோய்க்குறியறிதல் என்பர். சமூகப்பணியின் மூன்று செயல்நிலைகளில் 1.சமூக ஆய்வு (social study) 2. (பிரச்சனைக்கான) சமூகக் காரணமாறிதல் (Social Diagnosis) 3. சிகிச்சை / நிவாரணம் (treatment). சமூகக் காரணமாறிதல் முக்கியமான செயல்நிலையாகும். தற்போது பெரும்பாலான சமூகப்பணியாளர்கள் மருத்துவத் தொடர்புடைய diagnosis என்ற வார்த்தைக்கு பதிலாக செயல்முறை மதிப்பீடு (process assessment) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். சில சமூகப்பணியாளர்கள் Diagnosis என்பதை அடிப்படைக் காரணங்களை அறிவது என்ற பொருளிலும், assessment என்பதைப் பலவழிகளில் சேகரித்த தகவல்களை மதிப்பீடு செய்வது என்ற பொருளிலும் பயன்படுத்துகின்றனர்.
English
The process of identifying a problem (social and mental, as well as medical) and its underlying causes and formulating a solution. In early social work delineations, it was one of the three major processes, along with social study and treatment. Currently, many social workers prefer to call this process assessment because of the medical connotation that often accompanies the term “diagnosis.” Other social workers think of diagnosis as the process of seeking underlying causes and assessment as having more to do with the analysis of the relevant information.