diagnostic school in social work
நுண்ணாய்வு அல்லது நோயியல்பறிந்து / பிரச்சனையறிந்து செய்யப்படும் சமூகப்பணி
தமிழ் விளக்கம்
மானுட ஆளுமையின் வளர்ச்சியை, தன்மையை, பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள பல்வேறு கருத்தாக்கங்கள் சமூகப் பணியாளர்களுக்கு உதவுகின்றன. சிக்மண்ட் பிராய்டால் பிரேரிக்கப்பட்ட Diagnostic school (நுண்ணாய்வு அல்லது நோயியல்பு அறிதல்), ஓட்டோ ரேங்க் போன்றவர்கள் பரிந்துரைத்த functional school (மனித செயல்சார்ந்த) கருத்தாக்கங்கள் சமூகப் பணியாளர்களுக்கு பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவும் அதைத் தீர்க்கவுமான வழிமுறைகளைக் காட்டுகின்றன. பிரச்சனைகளைத் தீர்க்க உள இயக்கத் (மனத்தின் இயங்கு) தன்மை, சமூக மாற்றங்கள் மனதின் மீது ஏற்படுத்திய தாக்கம், சிகிச்சை முறையில் அகநோக்குப் பார்வையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திய சமூகப்பணியின் செயல் / சிகிச்சை முறைகளை நுண்ணாய்வு அல்லது நோயியல்பறிந்து / பிரச்சனையறிந்து செய்யப்படும் சமூகப்பணி எனலாம். இதற்கு மாறாக, செயல்சார்ந்த சமூகப் பணி, பிராய்ட் பரிந்துரைத்த பிரச்சனையின் விரிவான வரலாறு, நோயறிதல் முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், ஒரு சமூகப் பணியாளரோ, சமூக சேவை நிறுவனமோ ஒரு பிரச்சனைக்கானத் தீர்வில் எப்படி பரீட்சார்த்தமாக செயல்பட்டு அதை தீர்க்கலாம் என்ற செயல்சார்ந்த வழிமுறைகளைக் கையாண்டனர். வாடிக்கையாளர்களின் நோயியல்பறிந்து செயலாற்றுதல், வாடிக்கையாளர்களின் செயலியல்பரிந்து செயலாற்றுதல் இரண்டும் சமூகப்பணியின் முக்கியமான அணுகுமுறைகளாகும்.
English
The name given to the orientation in social work that emphasized psychodynamic and social change theories and insight therapies. The term was first used to distinguish this group of social workers from colleagues who were identified with the functional school in social work.