dichos

ஸ்பானிஷ் மொழியில் சொல்லப்படும் (கேலிப் பேச்சு, சொலவடை, சரசவார்த்தை) நீதிக்கதை, பழமொழி

தமிழ் விளக்கம்

பாடல் வடிவிலும், பழமொழிகளாகத் தன்னிச்சையாக வெளிப்படும் ஸ்பானிய பேச்சு. இது பெரும்பாலும் மக்களின் மனப்பாங்கு, தார்மீக மதிப்புகள், நடத்தை குறித்த பேச்சாக இருக்கும். ஸ்பானீஷ் அல்லாத பிற சமூகப்பணியாளர்கள், தங்களிடம் வரும் ஸ்பானிய வாடிக்கையாளர்களை நெருக்கமாக உணரவைக்கும் பொருட்டு இந்தப் பழமொழிகளைப் பயன்படுத்துவர்.
உ.ம் அப்பியாச வித்தைக்கு அழிவில்லை, உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை, முடி உள்ள மகாராசி முன்சடை போடுவா, பின்சடை போடுவா மொட்டைத் தலைக்காரி என்ன செய்ய முடியும்?
உழக்கு அரிசி அன்னதானம் விடிய விடிய மேள தாளம், சாமியே சைக்கிள்லே போகுது பூசாரி புல்லட் கேட்டானாம் - இது போன்ற கலாச்சாரத் தொடர்புடைய பழமொழிகளைக் கையாளும் போது வாடிக்கயாளரை எளிதில் நெருங்கலாம்.

English

Proverbs or folk sayings commonly used in Spanish-speaking cultures. Dichos are usually brief and spoken spontaneously, often in rhymes, and are used as guidelines in the development of attitudes, moral values, and social behavior. Social workers who serve Hispanic clients sometimes use these metaphors as tools to facilitate the working relationship and overcome resistance. Maria E. Zuniga (“Using Metaphors in Therapy: Dichos and Latino Clients,” Social Work, 37[January 1992], pp. 55–60) suggests that non-Spanish–speaking clinicians use such dichos only when guided by Latino clinicians.