differentiation phase
மாறுபாட்டை / வேறுபாட்டை / தனித்துவத்தை உணரும் கட்டம்
தமிழ் விளக்கம்
சமூகக் குழுப்பணியில் குழுவே உறுப்பினர்களின் வளர்ச்சிக்கும், அவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குமான உத்தியாதலால், குழு வளர்ச்சியின் பல்வேறு பரிமானங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும். குழு வளர்ச்சி பொதுவாக பல நிலைகளைக் கொண்டதாகும். இதைப் புரிந்துகொள்ள பல்வேறு கருத்தாக்கங்கள் உள்ளன. குழு வளர்ச்சி நிலைகள் பற்றிய கருத்தாக்கங்கள், குழுவின் குறிக்கோளை ஒட்டியும் (Teleological models), குழு உறுப்பினர்களுக்கு இடையே ஏற்படும் உறவின் தன்மையை ஒட்டியும் (Dialectical models), குழு உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் விலக்கலை ஒட்டியும் (Evolutionary models) பல்வேறு ஆய்வாளர்களால் விளக்கப்பட்டிருக்கின்றது. அதில், கர்ட் லீவின் மாதிரி (Kurt Lewin's Individual Change Process), டக்மன்ஸ் மாதிரி (Tuckman's Stages model), டப்ஸ் மாதிரி (Tubbs' Systems model), பிசர் கோட்பாடு (Fisher's theory of decision emergence in groups) பூல்ஸ் பல்நிலை மாதிரி (Poole's multiple-sequences model) போன்றவை முக்கியமானதாகும். இந்த மாதிரிகள் ஒரே நிலையைப் பல்வேறு வார்த்தைகளால் விளக்குகின்றது. சமூகப்பணியாளர்கள் குழு வளர்ச்சியை விளக்க டக்மன்ஸ் மாதிரியைப் பெரும்பாலும் கையாளுவார்கள் (அது ஐந்து நிலைகளைக் கொண்டதாகும். 1. Forming stage குழு உருவாகும் காலகட்டம். (அறிமுகக் கட்டம்) 2. Storming Stage குழு உறுப்பினர்களிடையே ஏற்படும் குழப்பக் கட்டம். 3. Norming Stage விதிகள், நடைமுறைகள் உருவாகும் காலகட்டம் 4. Performing stage குழு செயல்பாட்டுக் காலகட்டம் 5. Adjourning Stage குழு முடிவுறும் கட்டம்) ஆனால் மாறுபாட்டை உணரும் நிலையை விளக்கியிருப்பது கார்லாண்ட், ஜோன்ஸ் மற்றும் கொலோட்னி போன்றவர்கள், இவர்கள் விளக்கிய மாதிரியில் குழு வளர்ச்சி ஐந்து நிலைகளைக் கொண்டதாகும். 1. இணக்க நிலைக்கு முன் நிலை (Pre-affiliation) 2. அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டிற்காக முயலும் நிலை (Power and control) 3. அந்நியோன்ய / நெருக்கமான நிலை (Intimacy) 4. மாறுபாட்டை / வேறுபாட்டை / தனித்துவத்தை உணரும் நிலை (Differentiation) 5. பிரியும் நிலை. இதில் நான்காவது நிலைதான் வேறுபாட்டை / தனித்துவத்தை உணரும் நிலை. இந்த நிலையில் குழுவிலுள்ள உறுப்பினர்கள் தங்களுடைய பிரச்சனைகளைப் புரிந்து கொண்டது மட்டுமல்ல, அந்தப் பிரச்சனைகளைத் தாங்களாகவே தீர்ப்பதற்கானத் திறனும் பெற்றிருப்பர்.
English
The fourth of five group development phases in which group members develop a greater sense of their own unique problems and ability to solve them within themselves and among the other group members. This phase follows the intimacy phase in which the member becomes such an integral part of the group-as-a-whole that individuality is somewhat subordinated to the needs of the group. These two stages in the group progression follow the preaffiliation phase and the power-and-control phase and precede the separation phase. Many other typologies have also been proposed to describe the different phases in the typical life of a groupwork or therapy group.