diphtheria

டிப்த்திரியா (தொண்டை அடைப்பான்), தொண்டை அழற்சி நோய்; காற்றுக் குழாயைப் பாதிக்கும் தொண்டைத் தொற்று நோய்வகை

தமிழ் விளக்கம்

இது சுவாச மண்டலம் (நுரையீரல்கள்), தொண்டை, வாய் அல்லது தோலைப் பாதிக்கும் ஒரு நோய்த்தொற்று ஆகும். இந்நோய் “கார்னிபாக்டீரியம் டிப்த்திரியா” எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது மூக்கு மற்றும் வாயில் சுரக்கும் கோழையின் மூலம் ஒருவரிலிருந்து மற்றவருக்குப் பரவுகிறது. கூடுதலாக, இவ்வகைப் பாக்டீரியாக்கள், ஒருவித நச்சுப் பொருளினை உற்பத்தி செய்கிறது. இந்நச்சுப் பொருள் இதயத் தசைகளையும் மற்றும் நரம்புகளையும் சிதைவடையச் செய்கிறது. மூக்கில் நீர் வடிதல், தொண்டை வலி, காய்ச்சல், சுகவீனமாக உணர்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். டிப்த்திரியா வாழ்க்கைக்கு அச்சுறுத்தலான ஒரு நோய். எனவே, எந்தவொரு குழந்தைக்காவது இந்நோய் இருக்கலாம் என சந்தேகிக்கும் போது, உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இதைத் தடுக்க குழந்தைகளுக்கு டிடிபி தடுப்பூசியைப் போட வேண்டும்.

English

A contagious disease that occurs mostly in preschool children and is transmitted by droplets of moisture exhaled by infected individuals. The bacteria that cause the disease lodge in the mucous membranes of the throat, producing tissue-destroying toxins. Diphtheria deaths are caused by tissue damage, particularly in the heart. The disease was once common in the United States and elsewhere, but inoculations of diphtheria toxoids routinely given to infants have minimized its incidence rate.