Diplomate in Clinical Social Work
மருத்துவ சமூக பணியில் தூதுவர்
தமிழ் விளக்கம்
நோய் சார்ந்த / பிணி சார்ந்த சமூகப்பணி அனுபவமுள்ள, சமூகப்பணிக் கல்விக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட சமூகப்பணிக் கல்லூரியில் பட்டம் பெற்ற, சமூகப்பணி முதுகலை மாணவர்களுக்கு களப்பணி மேற்பார்வை அனுபவமுள்ள, 5 வருடங்களில் 7500 மணி நேரம் பிணி சார்ந்த சமூகப்பணி அனுபவமுள்ள சமூகப்பணியாளர்களுக்கு தேசிய சமூகப்பணி நிறுவனமோ (National Association of Social Workers [NASW], அல்லது பிணி சார்ந்த சமூகப்பணிக்கான அமெரிக்க அமைப்பின் தேர்வுக் குழுவோ அளிக்கும் சான்றுப் பட்டயமே மருத்துவ சமூகப்பணியில் தூதுவர் என்ற சான்றிதழ்,
நோய் சார்ந்த / பிணி சார்ந்த சமூகப் பணி - சமூகப்பணியில் பிணி சார்ந்த (நோய் சார்ந்த / இயலாமை சார்ந்த) சிகிச்சைக்கான (நிவாரணம் / தீர்வு) சிறப்புத் தொழில்முறை. இந்தத் தொழில்முறையைத் தனிமனிதர்களோடும், குழுக்களோடும், குடும்பங்களோடும் சமூகப்பணியாளர்கள் அப்பியாசிக்கின்றார்கள். நோய்சார்ந்த சமூகப்பணியென்பது, சமூகப்பணியின் கோட்பாடுகளையும் அணுகுமுறைகளையும் கையாண்டு, சமூக உளவியல் செயலின்மையால் ஏற்படும் உணர்ச்சி மற்றும் உளக்கோளாறுகளுக்குச் சிகிச்சையளிக்கவும், தடுக்கவும் உபயோகப்படுத்தப்படும் முறை என்று NASW விளக்குகிறது. இதைச் சமூகத் தனியாளர் பணி (social case work), உளப்பிணி சமூகப்பணி என்பதற்கு இணையாகப் பொருள்கொண்டாலும், அம்முறைகளிலிருந்து வேறுபாட்டது என்றும் சொல்லப்படுகிறது. இது மற்ற எந்த சமூகப்பணி முறையை விடவும், மனிதரை அவரின் சூழலில் பொருத்திப் பார்த்துப் புரிந்துகொள்வதை அதிகமாக வலியுறுத்துகிறது என்று சொல்லப்படுகிறது.

English
A credential to distinguish advanced-level, professional clinical social workers who meet the qualifications of the sponsoring organization (such as American Board of Examiners in Clinical Social Work [ABE] or the National Association of Social Workers [NASW]). Qualifications typically include many or all of the following: a graduate degree from a Council on Social Work Education (CSWE)–accredited school, postgraduate supervision, direct practice experience (usually more than 7,500 hours within five years), fulfillment of requirements for state licensing, and the passing of an advanced examination.