direct practice
நேரடியாகப் பணியாற்றுதல்
தமிழ் விளக்கம்
தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு, சமூகப்பணியாளர் பல்வேறு வழிகளில் உதவி புரிய முடியுமென்றாலும் வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளைத் தன்னுடைய நேரடித் தொடர்பினாலும் (face to face), நேரடியான வழிகாட்டலாலும், வாடிக்கையாளரின் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் முறை. இது கூட்டாகச் சிகிச்சை அளிக்கும் முறையிலிருந்து வேறுபட்டது.
கூட்டாகச் சிகிச்சை அளித்தல் - கூட்டுச் சிகிச்சை முறை என்பது ஒரு வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப பலதிறப் பயிற்சியுடைய நிபுணர்களால் கையாளப்படும் சிகிச்சை முறையாகும். இதில் வாடிக்கையாளர்களும் சிகிச்சை அளிப்பதில் பங்கு பெறுவார்கள். வாடிக்கையாளர்களுடன் சிகிச்சை முறைகள் பற்றி கலந்தாலோசித்தும், சிகிச்சையாளர்கள் கண்டறிந்த நோய்க்குறிகள், அவர்களின் பிற குறிப்புகளை நோயாளிகளுக்குப் புரியும் வண்ணம் எடுத்துரைக்கப்படும். இந்தக் கூட்டுச் சிகிச்சை முறை பெரும்பாலும் பாலின அடையாளக் குறைபாடு உள்ளவர்கள், திருநங்கைகள், மாற்று வாழ்க்கையைத் தேர்வு செய்தவர்கள், எதிர்பாலின இச்சைகள்தாம் இயல்பானதென்று கருதாதவர்கள், ஒரு துறை சார்ந்த நிபுணத்துவம் உள்ள அறிவாளிகள் போன்றவர்களுக்கு அளிக்கப்படுகின்றது.

English
The term used by social workers to indicate their range of professional activities on behalf of clients in which goals are reached through personal contact and immediate influence with those seeking social services. It is to be distinguished from indirect practice.