direct practice skills
வாடிக்கையாளர்களுடன் நேரடியாகப் பணியாற்றத் தேவையான திறன்கள்
தமிழ் விளக்கம்
சமூகப்பணி அறிவைத் தனிநபர்கள், குழுக்கள், குடும்பங்கள், குழுக்கள் மற்றும் சமுதாயப் பிரச்சனைகளைத் தீர்க்கப் பயன்படுத்தும் திறன். மூன்று வகையான திறன்களை ரூத் மிடில்மேன் மற்றும் கெய்ல் கொல்ட்பர்க் வுட் (Ruth R. Middleman and Gail Goldberg Wood) என்பவர்கள் குறிப்பிடுகிறார்கள். 1.சமூகப்பணியாளரின் அகத் திறன் (inner skills - கண்ணோட்டம் மற்றும் அறிதல் திறன் 2. கருத்தாடல் திறன் (interactional - வாடிக்கையாளர் உணர்வுகளை வெளிப்படுத்த சூழ்நிலை ஏற்படுத்திக் கொடுத்தல்) 3. வினைமுறைத் திறன் (strategic - வாடிக்கையாளரின் நடத்தை மற்றும் மனக்குழப்பத்தைக் கையாளுதல்). இத்திறன்களோடு குழுக்களில் பணியாற்றவும், குழுக்களைக் கட்டமைக்கவும், குழுக்களைச் செயலூக்கம் பெறவைக்கவும் தேவையான திறன்களும் தேவை.
English
The ability to put social work knowledge into effective intervention activities with individuals, families, groups, and communities. According to Ruth R. Middleman and Gail Goldberg Wood (Skills for Direct Practice in Social Work, New York: Columbia University Press, 1990), these skills are inner (perception and cognition), interactional (setting the stage, dealing with feelings and information), and strategic (dealing with behavior and coping with conflict). Additional skills for working with groups include building groups, facilitating the work of groups, working with groups that do not verbalize readily, and providing nontalking times with groups. See also social work skills.