disability

இயலாமை. ஊனம், தகவின்மை, தகுதிக் குறை; ஆற்றலின்மை

தமிழ் விளக்கம்

யாரொருவர் தன்னுடைய அன்றாடக் கடமைகளை, உடல் அல்லது மனநிலை காரணமாகவோ, இயலாமையாலோ, தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ, செய்ய இயலா நிலை ஏற்படுவதை ஊனம் என்கிறோம்.
அங்கஹீனம், இயலாமை, ஊனத்திற்கான சர்வதேச வகைப்பாடு (International Classification of Impairment, Disability, and Handicapped (ICIDH) இயலாமையின் பல்வேறுபட்ட தன்மைகளை வரையறுத்து, பொதுவான புரிதலை உருவாக்க உதவுகிறது. உலக சுகாதார அமைப்பால் 1980 இல் வெளியிடப்பட்ட. இந்த வகைப்பாடு மூன்று முக்கியப் பரிமாணங்களை விளக்குகிறது. 1.அங்கஹீனம் (Impairment உறுப்பு மற்றும் உடல் சார்ந்த பரிமாணம் body perspective) 2. இயலாமை (Disability தனிநபர் சார்ந்த பரிமாணம் personal perspective) 3. ஊனம் (Handicapped சமூக சார்ந்த பரிமாணம் social perspective)
1.உடலியக்க ரீதியாகவோ, நரம்பு மண்டல ரீதியாகவோ, உடற்கூறு ரீதியாகவோ உறுப்புக்கள் இல்லாத நிலையையோ (loss or absent), உறுப்புக்கள் இருந்தும் அதன் இயற்கைத் தன்மையிலிருந்தோ செயல்பாட்டிலிருந்தோ மாறியிருக்கும் (deviation) தன்மையை அங்கஹீனம் (Impairment) என்பர்.
2. மனிதர்கள் இயல்பாகச் செய்யும் செயல்களை உதாரணமாக கற்றல், உரையாடுதல், நடத்தல், மற்றும் பிற செயல்களைச் செய்ய முடியாமையும், செய்ய முடியும் பட்சத்தில் சிரமப்பட்டோ அல்லது குறைபாட்டுடனோ செய்யும் நிலையை இயலாமை (Disability) என்பர்.
3. ஒரு மனிதரின் இயலாமை (Handicapped) அவருக்கும் அவரைச் சார்ந்த சமூகத்திற்கும், புறச் சூழலுக்கும் இடையே இயல்பாக ஏற்படுகின்ற தொடர்புகளைக் கட்டுப்படுத்தி, அதனால் அவரின் கல்வி, வேலை, மற்றும் பிற தொடர்புகளைப் பாதிக்கும் நிலையை ஊனம் என்பர்.

English

Temporary or permanent inability to perform “normal” activities, usually as a result of a physical or mental condition or infirmity. See also International Classification of Impairment, Disability, and Handicapped (ICIDH); impairment; and handicap.