disability benefit

இயலாதவர்களுக்கு/ ஊனமுற்றவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி

தமிழ் விளக்கம்

உடல் அல்லது உளக் காரணத்தால் தங்களுடைய அன்றாடக் கடமைகளில் சிலவற்றை இயல்பாகச் செய்ய இயலாதவர்களுக்கு, அவர்களின் இயலாமையின் தன்மையைப் பொறுத்து அரசால் பணமாகவோ, பொருளாகவோ, சேவைகளாகவோ அல்லது சலுகையாகவோ வழங்கப்படும் உத்தரவாதமான உதவிகள். இயல்லாதவர்களுக்கான இயலாமைக் காப்பீட்டுத் திட்டம் (Disability Insurance (DI) program), துணை வருமானப் பாதுகாப்புத் திட்டம் போன்றவை இந்த வகையான திட்டங்களில் அடங்கும்.

English

The provision of cash, goods, or services to one who is not capable of performing certain activities because of a physical or mental condition; a form of categorical assistance based on incapacity. In the United States, the Disability Insurance (DI) program for disabled people and the Supplemental Security Income (SSI) program for needy disabled people are currently the most extensive examples of this type of program. See also temporary disability insurance.