Disability Insurance (DI)

இயலாமைக்கான / ஊனமுற்றோருக்கான காப்பீடு

தமிழ் விளக்கம்

அமெரிக்கக் குடிமகன்களில் யாரொருவர், எந்த வேலையை அனுபவத்தின் அல்லது பயிற்சியின் அடிப்படையில் அல்லது வேறுவகையில் செய்து வருமானமீட்டி வந்தாரோ, அந்த வேலையை ஒரு வருடத்திற்கு மேலாகவோ அல்லது வாழ்நாள் முழுவதும், தன் இறப்பு வரைக்கும் செய்யமுடியாத இயலாமை ஏற்படும்போது, சமூகப்பாதுகாப்பு அலுவலகம் (Social Security Administration (SSA), அவருக்கு அளிக்கும் பொருளாதார உதவிகள் இதிலடங்கும். சுருக்கமாக, ஒரு தொழிலாளி காயமுற்றலோ, நோயுற்றாலோ, மன உளைச்சல் காரணமாகவோ, உடல் பலவீனத்தாலோ, தனக்களிக்கப்பட்ட வேலையைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு அவருடைய வருமானம் பாதிக்கப்படும் போது, சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, குறுகியகால இயலாமைக் காப்பீடு, நீண்டகால இயலாமைக் காப்பீடு போன்ற பலன்களை அளித்து அவருடைய வருமான இழப்பை ஈடு செய்வது. இதுதவிர வேறு வகையில் இயலாதிருப்பவர்கள், மன வளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகள், குழந்தைப்பருவ குறைபாடு உடையவர்கள், 10 ஆண்டுகள் ஒரு தொழிலாளியுடன் தாம்பத்தியத்தில் இருந்த 50 வயதைக் கடந்த பெண்கள், எச்ஐவி நோய்த்தொற்று உள்ளவர்களுக்கும் இயலாமைக் காப்பீடு வழங்கப்படுகிறது.

English

The U.S. Social Security Administration (SSA) program to provide for the economic needs of those who can no longer earn an income because of chronic incapacity. To be eligible clients must be no longer able to do the work for which they were trained and experienced or other suitable kinds of employment. The disability must be expected to last for at least a year or to result in death. Others who may be eligible under certain circumstances include disabled children (such as those with mental retardation or various childhood conditions), disabled former spouses (older than age 50 if the marriage lasted 10 years or longer), and people with human immunodeficiency virus (HIV) infection.