disarmament

போர்க்கருவிக் குறைப்பு, படைக்குறைப்பு, ஆயுதக்குறைப்பு, ஆயுதபரிஹரணம்

தமிழ் விளக்கம்

ஒரு நாட்டினிடமோ அல்லது ஒரு குழுவினிடமோ இருக்கும் ஆயுதங்கள் / படைக்கருவிகளைக் குறைப்பதற்கோ, அழிப்பதற்கோ சர்வதேச சமூகம் தீர்மானித்தலும் அதன் மீது செயல்படுவதும் ஆயுதக்குறைப்பு நடவடிக்கை எனப்படும். சமூகப்பணியாளர்கள் சமாதான இயக்கங்களில் பங்கெடுத்து பலநாடுகளை, தாங்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை ஒப்படைக்கும்படியும், பிறருக்கு ஆயுதம் வழங்குவதை, விற்பதை நிறுத்தக் கூறியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

English

The intentional decisions and actions that bring about a reduction in or elimination of the weapons possessed by a nation or group. Many social workers have been active in the peace movement, in which nations are encouraged to lay down their arms or discontinue supplying arms to others. See also peace dividend.