disaster relief planner

பேரழிவு நிவாரணத் திட்டமிடுபவர்

தமிழ் விளக்கம்

பேரழிவு நிகழக்கூடிய சாத்தியமான இடங்கள், அங்கு பேரழிவு நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள், அப்படி நிகழும் பட்சத்தில் அதனுடைய விளைவுகளை முன்கணித்து, பேரழிவை எப்படி எதிர்கொள்வது, அதன் விளைவுகளை எப்படிக் குறைப்பது போன்றவற்றை எடுத்துரைத்து, நிவாரணப் பணிகளுக்காக அங்குள்ள மக்களையும் நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுபவர். இந்தியாவில் இந்தப் பணியை தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்து வருகின்றது. இது இந்தியாவில் ஏற்படக்கூடிய இயற்கைப் பேரழிவுகள் முதல், உயிரியல், ரசாயன, அணுக் கதிரியக்கம் முதலான எல்லா வகைப் பேரழிவுகளையும் சமாளிக்கும் வழிமுறைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உருவாக்கபட்ட ஆணையமாகும்.

English

One who predicts the probabilities, consequences, and locations of a potential disaster; organizes people and structures to provide disaster relief; and educates the populace about how to respond and minimize a disaster's consequences. Many communities have offices of emergency management in which this function is performed. The U.S. Federal Emergency Management Agency (FEMA) fulfills some of these functions nationally. See also emergency basic-needs services.