disaster syndrome
பேரழிவு / பேரிடர் அறிகுறி, பேரழிவு நோய்க்குறித் தொகுப்பு
தமிழ் விளக்கம்
நெருக்கடி நிலையினாலோ, பேரிடரினாலோ பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் உளவியல் மற்றும் சமூக ரீதியான சிக்கல்களின் பல்வேறு அறிகுறிகள். பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் சமூகப் பணியாளர்கள், இந்தச் சிக்கல்கள் பல நிலைகளில் வெளிப்படுவதாக அறிந்துள்ளனர். 1. நெருக்கடி / பேரிடருக்கு முந்தைய நிலை - preimpact (பேரிடர் நிகழப்போவதாக எச்சரிக்கப்பட்டவுடன் அவர்களிடம் உருவாகும் அச்சமும், பதட்டமும்) 2. பேரிடர் தாக்கம் - impact (மக்கள் தங்களுக்குள்ளான வேற்றுமைகளை மறந்து நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்துதல்) 3. பேரிடர் முடிந்த பின்பு - postimpact (ஆக்கபூர்வ கட்டம். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து மீண்டெழ முயலும் நிலை) 4. அவநம்பிக்கை நிலை - disillusionment (பாதிப்புகளிலிருந்து மீண்டெழ காலதாமதமாகலாம் என்று உணரும் நிலை). பேரழிவிலிருந்து தப்பியவர்களின் மனோநிலை வேறுவிதமாகவும் சித்தரிக்கப்படுகிறது 1. பேரழிவு நிகழ்ந்தவுடன் (Minutes to hours) - ஏற்படும் நிலைகுலைவு, செய்வதறியது திகைத்து கதறுதல் 2. .பேரழிவு முடிந்த சில நாட்களில் (Days) - தன்னைவிட மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி உதவுவது என்று தெரியாத நிலை. தான் உயிர் பிழைத்ததற்கே வருந்தும் நிலை 3. சில வாரங்களில் (Weeks) - பிறருடன் இணைந்து எப்படியாவது மீண்டெழ வேண்டுமென்ற நன்னிலையுணர்வு நிலை 4. சில மாதங்களில் (Months) - பேரழிவின் பாதிப்புகளை ஏற்றுக்கொண்டு வாழப்பழகுதல்.
.
.
English
The psychological and social relationship problems typically experienced by victims of a crisis or calamity. Social workers who specialize in disaster relief identify several phases of the syndrome: preimpact (apprehension and anxiety accompanying the threat or warning); impact (the hazard strikes and the community organizes its relief effort); postimpact (often characterized as a “honeymoon” phase of high energy for coping and mutual cooperation); and disillusionment (when people encounter the long-term obstacles brought about by the disaster).