discharge planning
நிறைவேற்றத் திட்டமிடல், பொறுப்பு நீங்கத் திட்டமிடல், சிகிச்சை முடித்து நோயாளிகளை விடுவிப்பதற்கான திட்டமிடல், விடுவித்தலுக்கான திட்டமிடல்
தமிழ் விளக்கம்
மருத்துவ மனையிலோ அல்லது பிற சேவை நிறுவனங்களிலோ சிகிச்சை பெறவந்த நோயாளிகள் / பிரச்சனையோடு வந்த வாடிக்கையாளர்கள் சிகிச்சை முடிந்த பின் / உதவி பெற்ற பின், தங்களை எவ்வகையிலெல்லாம் சுயமாகப் பராமரித்துக் கொள்ளமுடியும் என்பதற்கு ஆலோசனை சொல்லி, அவர்களைத் தங்களின் தொடர் கண்காணிப்பிலிருந்து சமூகப்பணியாளர் விடுவிக்கும் நிலை. விடுவிப்பதற்கான திட்டமிடலை முறையாகச் செய்யும் போது வாடிக்கையாளர் / நோயாளி தன்னுடைய பிரச்சனையையும் அதன் தன்மையையும் புரிந்துகொண்டு, தான் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தெரிந்துகொண்டு, அதற்கேற்றபடி தன் நடத்தை / மனப்பாங்கை மாற்றிக்கொள்ளவும், எங்கிருந்தெல்லாம் உதவி பெற முடியும் என்பதைத் தெரிந்து கொண்டு வெளியேறுவார்.
.
.
English
A social service in hospitals and other institutions that is designed to help the patient or client make a timely and healthy adjustment from care within the facility to alternative sources of care or to self-care when the need for service has passed. When practiced by skilled social workers, discharge planning helps the client and relevant others understand the nature of the problem and its impact, facilitates their adaptations to their new roles, and helps arrange for postdischarge care. See also channeling and premature termination.