disease
நோய், பிணி; சீரழிந்த நிலை, கோளாறு
தமிழ் விளக்கம்
நோய் (வியாதி, பிணி) என்பது உயிரினங்களின் உடலிலோ, மனதிலோ ஏற்படும் அசாதாரண நிலைகளைக் குறிக்கும். இதனை நலமற்ற நிலை, சீரழிந்த நிலை எனலாம். நோய் மனித வாழ்வின் நிலையான துன்பங்களில் ஒன்று. நோய் பொதுவாக அறிகுறிகள் (signs) மற்றும் உணர்குறிகளுடன் (symptoms) தொடர்புடைய மருத்துவ நிலை எனலாம். நோய் ஏற்படும்போது, நோய்வாய்ப்படும் உயிரினம் சில அசெளகரியங்களை, சீரற்ற நிலையை அல்லது அசாதாரண நிலையை உணர்தல் உணர்குறி என்றும், மருத்துவருக்குத் தெரியக்கூடிய அசாதாரண நிலைகள் அறிகுறிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. நோயானது உள்ளகக் காரணிகளாலும், வெளியகக் காரணிகளாலும் தோற்றுவிக்கப்படலாம். நோய்க் காரணிகளால் (எ.கா. நோய் பரப்பும் கிருமிகள்) ஏற்படக்கூடிய தொற்று நோய்கள் வெளிக் காரணிகளால் ஏற்படும் நோய்களாகும். உடலின் செயற்பிறழ்வுகளால் ஏற்படும் தன்னெதிர்ப்பு நோய்கள் உள்ளகக் காரணிகளால் ஏற்படும் நோய்களாகும்.
உடல்நலக் குறைவு (illness), நோயுணர்வு (sickness) என்னும் சொற்கள் 'நோய்' என்பதற்கு இணையான பெயர்களாகப் பொதுவாக வழங்கப்படுகின்றன என்றாலும், இப்பெயர்கள் சிலவேளைகளில் நோயாளிகள் தங்களுக்கேற்பட்ட நோயினைக் குறித்த தனிப்பட்ட அனுபவத்தைக் குறிப்பிட உபயோகப்படுத்தப்படுகின்றன. இதன்படி, உடல்நலக் குறைவில்லாமல் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்க முடியும் (உதாரணமாக நோய்க்குறிகளற்ற மருத்துவ நிலையைக் கூறலாம்). அதேபோல, நோய்வாய்ப்படாமல் உடல்நலக் குறைவுடன் (உதாரணமாக, நோயற்ற நிலையை நோயுற்றதாக ஒருவர் எண்ணும் நிலைமை) இருக்க முடியும். உடல்நலக் குறைவு என்பது பெருமளவு நோய்த்தொற்றுகளினால் ஏற்படுவதில்லை. ஆனால், நம் உடலில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் (எதிர்வினைகள் - நோயுணர்வு நிலை) நோய்த்தொற்றுகளை நீக்க உதவுகிறது. சோம்பல், மனத்தளர்ச்சி, பசியின்மை, தூக்கக்கலக்கம், மிகை வலியுணர்வு (hyperalgesia), ஒருமுகப்படுத்துவதில் சிக்கல்கள் போன்றவற்றை உடல்நலக் குறைபாடுகள் எனக் கூறலாம்.
நோய், பிறழ்வுகள், நோயுற்ற விகிதம், உடல்நலக் குறைவு ஆகிய சொற்கள் ஒன்றுக்குப் பதில் இன்னொன்றாகப் பல இடங்களில் வேறுபடுத்தப்படாமல் உபயோகப்படுத்தபடுகின்றது. இது தவிர வலியை உண்டாக்கும் நிலைகள், உடலின் செயற்பிறழ்வுகள், கடுந்துன்பம் ஏற்படுத்துபவை, சமூகப் பிரச்சனைகளை உண்டாக்குபவை, ஒருவருக்கு மரணத்தை விளைவிக்கக்கூடியவை அல்லது நோய்வாய்ப்பட்டவருடன் உள்ள தொடர்பால் பிறருக்கு மரணத்திற்கு இணையாக நிகழும் பிரச்சனைகள் என நோய் என்பது விரிவானதொரு பொருளில் உபயோகப்படுத்தப்படுகிறது. இத்தகு விரிவானதொரு பொருளில் சிலநேரங்களில், பிற சூழல்கள் அல்லது நோக்கங்களுக்காகத் தனித்துவமாக வகைப்படுத்தக்கூடியவையாக உள்ள காயங்கள், உடல் ஊனங்கள், நலச் சீர்கேடுகள், நோய்க்கூட்டறிகுறிகள், நோய்த்தொற்றுகள், தனிப்பட்ட நோய் உணர்குறிகள், பொது நிலையிலிருந்து விலகிய நடத்தைகள், மனித வடிவம் மற்றும் செயல்களில் உள்ள அசாதாரணமான வேறுபாடுகள் ஆகிய அனைத்தையும் நோய் என்றே குறிப்பிடுகின்றோம். இருப்பினும் சில இடங்களில், குறிப்பிட்ட சொற்களைப் பயன்படுத்துவது விரும்பப்படுகிறது.

English
A condition in which a system (including all or part of a living organism) is not functioning properly; a disorder.