disincentive
ஊக்கத் தடை, ஊக்கக்கேடு, ஊக்கத் தடையான, ஊக்கங் கெடுக்கிற
தமிழ் விளக்கம்
தனிநபர்களோ, குழுக்களோ ஆர்வத்துடன் செயல்பட ஊக்கமளிக்காத நிலை. வருமானம் அதிகரிக்கும் போது அதற்கு இணையாக நலத்திட்ட உதவிகளையும் மருத்துவ உதவிகளையும் குறைக்கும் நடைமுறைகளால் பெரும்பாலோனார் பொருளாதாரத் தன்னிறைவடைவதில் ஆர்வமற்று இருப்பதை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இது 'ஏறினால் சருக்கும்' (cliff effect) என்ற cliff விளைவை ஒத்தது. குறிப்பிட்ட வருமானத்திற்கு மேல் வருமானமீட்டும்போது நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படும் நிலை. இதனால் வரையறுக்கப்பட்ட வருமானத்திற்குள் வருமானமீட்டவே நலத்திட்டப் பயனாளிகள் விரும்புகின்றனர். தங்களுக்குக் கிடைக்கும் பொருளாதார மற்றும் மருத்துவ உதவிகளை இழக்காமல் தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு அதிக வருமானமீட்டலில் ஆர்வம் காட்டாமல், சமூக நலத் திட்டங்களைச் சார்ந்திருக்க கற்றுக் கொள்கிறார்கள். இதற்கு மாற்றாக நலத்திட்ட உதவிகளைச் சட்டென்று நிறுத்தாமல், அதை படிப்படியாகக் குறைக்கும் முறையை (benefit rate reduction (BRR) சிலர் பரிந்துரைக்கின்றார்கள்.
English
A factor that discourages an individual or group from doing something. For example, reducing welfare or Medicaid benefits to people who have low-paying jobs sometimes discourages efforts to become economically independent. See also cliff effect.