disorderly conduct
ஒழுங்கற்ற நடத்தை, முறைகெட்ட நடத்தை, கட்டுப்பாட்டை மீறிய நடத்தை, சட்டத்துக்குக் கட்டுப்படாத நடத்தை, பொதுமக்களுக்குத் தொந்தரவு தருகிற நடத்தை, பொதுநலத்துக்குக் குந்தகமான நடத்தை
தமிழ் விளக்கம்
பொது அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவிக்கும் குற்றம். வீட்டற்றவர்கள், பொது இடங்களில் போதையுடன் நடமாடுபவர்கள், ஊர்வலம், மறியல் போன்ற செயல்களில் ஈடுபடும் சமூகச் செயல்பாட்டாளர்கள், கிளர்ச்சியாளர்கள், தொழிலாளர்கள் இந்த மாதிரியான குற்றங்களைச் செய்வதாகக் காவல்துறையினரால் குற்றம் சாட்டப்படுவதுண்டு. .
English
The crime of violating the public peace or safety. Charged with this crime often are homeless people, those intoxicated in public places, social activists or agitators, and labor picketers.