displaced populations
இடம்பெயர்ந்த மக்கள், வாழ்விடங்களிலிருந்து அகற்றப்பட்ட மக்கள், புலம் பெயர்ந்த மக்கள்
தமிழ் விளக்கம்
தங்களுடைய பூர்வீக வசிப்பிடங்களிலிருந்தும், வாழ்க்கை முறைகளிலிருந்தும் பல்வேறு காரணங்களால் வெளியேற நிர்பந்தத்திற்குள்ளான அகதிகள், குடியேறிகள், ஆவணமற்ற வெளிநாட்டினர் (கள்ளத் தோணியினர், அனுமதி பெறாமல் நுழைபவர்கள்), புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மற்றும் பருவகாலத் தொழிலாளர்கள் ஆகியோர் பொதுவாக இடம் பெயர்ந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்கள் எனப்படுகின்றனர். சமூகப்பணி கலைக்களஞ்சியத்தில் குறிப்பிட்டபடி (லியோன் கின்ஸ்பெர்க் மற்றும் பலர்) இம்மாதிரி இடம் பெயர்பவர்கள், புதுச் சூழலுக்குத் தங்களை தகவமைத்துக் கொள்வது நான்கு நிலைகளில் நடப்பதாகக் கண்டறிந்துள்ளனர். 1. புது வாழ்விடப் போக்கை ஏற்றுக்கொண்டு அதற்கு இசைவாகல் அல்லது தன்மயப்படுத்துதல் (தங்களுடைய கடந்தகால வாழ்முறைகளை விட்டுவிட்டு புதிய வாழ்முறைக்கு பழக்கிக் கொள்ளல்) 2. ஒருங்கிணைத்தல் (புதிய வாழ்முறையை ஏற்றுக்கொண்டாலும் பழைய வாழ்முறைகளின் சிறந்தவற்றைப் புதியதோடு இணைத்தல்) 3. பிரித்தறிதல் (ஒருங்கிணைக்கப்பட்ட புதிய வாழ்முறைகளிலிருந்து தங்களுடைய பூர்வீக அடையாளத்தை மீட்டெடுத்தல், தனி நிறுவனங்களை உருவாக்குதல் அல்லது தனித் தொடர்பு முறைகளை உருவாக்குதல்) 4. ஒதுக்கப்படுதல் அல்லது விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுதல் (தங்களுடைய கலாச்சார அடையாளத்தின் பெரும்பகுதியை இழந்ததால் ஏற்படும் மனக்குழப்பம், பெரும்பான்மைச் சமூகத்திடமிருந்து அன்னியப்படுதல் அதன் விளைவாக அவர்களிடம் மோதல் போக்கைக் கடைப்பிடித்தல்).
English
Groups of people who are uprooted from their established locations and lifestyles, including refugees, immigrants, undocumented aliens, migrant laborers, and seasonal workers. According to Fariyal Ross-Sheriff (“Displaced Populations,” in Leon Ginsberg et al. [Eds.], Encyclopedia of Social Work, 18th ed., 1990 supplement, Washington, DC: NASW Press, pp. 78–93), these groups tend to adapt to their new locations in one of four general ways: (1) assimilation (giving up one's former culture and its values to acquire those of the host society), (2) integration (maintaining a significant part of the cultural identity of the past while participating in the larger society), (3) separation (establishing a separate set of institutions or interactions), or (4) marginalization (loss of cultural identity resulting in confusion, alienation, and striking out against the larger society).