disposition
தன்மை, போக்கு, மனநிலை, உளச்சார்பு, சென்மவியல்பு, பிறவிச் சுபாவம், பிறவிக்குணம், சுபாவம்
தமிழ் விளக்கம்
ஒருவரின் இயற்கைப் பண்புகள் என்று பொதுவான பொருள் கொள்ளப்பட்டாலும் சமூகப்பணியில் இதை முன்னேற்பாட்டமைவு என்ற பொருளிலும் உபயோகப்படுத்தப்படுத்துகின்றனர். மருத்துவ மனையிலோ அல்லது பிற சேவை நிறுவனங்களிலோ சிகிச்சை பெற வந்த நோயாளிகள் / பிரச்சனையோடு வந்த வாடிக்கையாளர்கள் சிகிச்சை முடிந்து / உதவி பெற்ற பின், தங்களை எவ்வகையிலெல்லாம் சுயமாகப் பராமரித்துக் கொள்ளமுடியும் என்பதற்கு ஆலோசனை சொல்லி, அவர்களைத் தங்களின் தொடர் கண்காணிப்பிலிருந்து சமூகப்பணியாளர் விடுவிக்கும் நிலை. விடுவிப்பதற்கான திட்டமிடலை முறையாகச் செய்யும் போது, வாடிக்கையாளர் / நோயாளி தன்னுடைய பிரச்சனையையும் அதன் தன்மையையும் புரிந்துகொண்டு, தான் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தெரிந்துகொண்டு, அதற்கேற்றபடி தன் நடத்தை / மனப்பாங்கை மாற்றிக்கொள்ளவும், எங்கிருந்தெல்லாம் உதவி பெற முடியும் என்பதைத் தெரிந்துகொண்டு வெளியேறுவார். இதை நிறைவேற்றத் திட்டமிடல், பொறுப்பு நீங்கத் திட்டமிடல், சிகிச்சை முடித்து நோயாளிகளை விடுவிப்பதற்கான திட்டமிடல், விடுவித்தலுக்கான திட்டமிடல் (Discharge planning) என்ற வார்த்தையாலும் குறிப்பிடுவார்.
English
The arrangement made on behalf of a client or patient by the provider of health care or a social service to conclude the intervention. This may include referral to a more-appropriate resource, follow-up care, or successful achievement of goals so that help is no longer needed. In many types of case record, professionals conclude entries by writing “Disposition” (or “Disp.”), followed by the course of action recommended for the ongoing care of the client.