disruptive tactics

சீர்குலைக்கும் தந்திரோபாயங்கள், அமைதி குலைக்கின்ற தந்திரோபாயங்கள், குந்தகம் விளைவிக்கின்ற தந்திரோபாயங்கள்

தமிழ் விளக்கம்

சமூக நிறுவனங்களின் இயல்பான செயல்பாடுகளில் தலையிட்டு ஸ்தம்பிக்க வைப்பதன் மூலம், சட்டங்கள், சமூக விதிகள் மற்றும் அமைப்புகளில் மாற்றங்கள் கொண்டுவரச் செய்யப்படும் முயற்சிகள். சமுதாய அமைப்பாளர்களும், சமூகச் செயல்பாட்டாளர்களும், சமூகப் பிரச்சனைகள் பற்றியும், சமூக அநீதியைப் பற்றியும் மக்களின் கவனத்தை ஈர்த்து, சமூக அமைப்புகளை (உ.ம். அரசு, அரசுத்துறைகள், கல்வி நிலையங்கள், மருத்துவ சேவை போன்ற பொதுநுகர்வு சேவைகள்) மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ற மாதிரி மாற்ற / வடிவமைக்க இந்த மாதிரியான முயற்சிகளை மேற்கொள்வர். முடிவெடுக்க அதிகாரமுள்ள அதிகாரத்துவத்துவத்தை கெரோ செய்வது, உள்ளிருப்புப் போராட்டம், சாலை மற்றும் போக்குவரத்து மறியல், கேள்விகேட்டும் ஊளையிட்டும் அரசியல்வாதிகளின் பிரச்சாரத்தின் போது இடைமறித்துத் தொந்தரவு செய்வது, ஊளையிடுவது, மனிதச் சங்கிலி போன்ற பல்வேறு உத்திகளைக் கையாள்வார்கள்.

English

Actions that interfere with the normal operations of social institutions to bring about changes in laws, norms, or social structures. These activities are undertaken and coordinated, especially by social activists and community organizers, to call public attention to problems and injustices and to put pressure for change on an organization. Examples include sitdown strikes, sit-ins in the offices of corporate executives, picket lines on roads leading to nuclear reactors, organized heckling of political candidates during their speeches, and greenlining.