dissociative identity disorder
பிளவுபட்ட அடையாளச் சிக்கல் / சீர்கேடு, பிளவுப்பட்ட ஆளுமைச் சீர்கேடு, பல்வகை ஆளுமைச் சீர்கேடு
தமிழ் விளக்கம்
இரண்டு மூன்று ஆளுமைகளாகப் பிளவுபட்ட, பன்முகப் பிளவுண்ட ஆளுமைக் கோளாறு பிளவுபட்ட அடையாளக் கோளாறு என்றழைக்கப்படுகின்றது. இக்கோளாறுள்ளவர்கள் தங்களிடம் ஒன்றிற்கு மேற்பட்ட பிளவுண்ட ஆளுமை / அடையாளங்கள் இருப்பதையும், அது ஒன்றின்மீது இன்னொன்று ஆதிக்கம் செலுத்துவதையும், ஒன்றிற்கு ஒன்று முரண்பட்டு வெளிபடுவதையும் அறியமுடியா நிலையில் இருப்பார்கள். நூற்றுக்கு மேற்பட்ட பிளவுண்ட அடையாளங்களில் பெண்களிடம் சராசரியாக 15 வகையான அடையாளங்களும், ஆண்களிடம் எட்டுக்கு மேற்பட்ட அடையாளங்களும் தென்படும். இந்த அடையாள மாற்றங்கள் மெதுவாகவோ அல்லது கண்ணிமைக்கும் நேரத்திலோ மாறிமாறி வெளிப்படலாம்.
English
Formerly called multiple personality disorder, a form of dissociative disorder in which an individual has two or more distinct personalities. The individual may not be aware of the existence of these other personalities; alternative identities are experienced as taking control, supplanting the previous identity, or being in conflict with one another. The change in identity usually happens within seconds but in some cases occurs more gradually. The number of identities ranges from two to 100, with women averaging 15 and men averaging eight.