dissociative symptoms
தொடர்பறு அறிகுறிகள்
தமிழ் விளக்கம்
இது பலவிதமான அறிகுறிகளைக் கொண்ட மனக்கோளாறு. மிகு மன அழுத்தத்தால், உணர்வு நினைவு, அடையாளம், சுற்றுப்புற உணர்தலிலிருந்து அறிந்தும் அறியாமலும் தன் கவனத்தைத் திசை திருப்பிக் கொள்வது. இது தன்னைச் சுற்றியிருப்பவர்கள் மற்றும் சுற்றி நடப்பதைப் பற்றி அக்கறையின்மையோடு இருப்பதில் ஆரம்பித்து, உடல் மற்றும் உணர்ச்சி அனுபவங்களில் தீவிரமாக ஒதுங்கி இருப்பது என்று தன்னிலை இழத்தல் (depersonaliation), எதார்த்தமிழத்தல் (derealization), நினைவிழத்தல் (amnesia), நினைவு இருளடைதல் (fugue), அடையாளக் கோளாறுகள் (identity disorders), கவனிக்க இயலாமை (poor concentration), மற்றும் தன்வயப்படுதல் (preoccupation) என்று பல அறிகுறிகளைக் கொண்ட கோளாறு.
English
Psychophysiologi-cal reactions to stress by voluntarily or involuntarily changing one's functions and focus of consciousness, memory, identity, or perception of the environment. These symptoms include numbing, detachment, absence of emotional responsiveness, reduced awareness of one's surroundings, derealization, depersonaliation, amnesia, fugue, identity disorders, poor concentration, and preoccupation.