distracter role

கவனத்ததைத் திருப்புதல், வெவ்வேறு திசையில் எண்ணத்தை மாற்றுதல், உணர்வு குழப்புதல், கலக்கமுண்டாக்குதல், நச்சரிப்புச் செய்தல், இடைவிடாத தொந்தரவு உண்டுபண்ணுதல், தடுமாறச் செய்தல், குழுவிலோ குடும்பத்திலோ பிற உறுப்பினர்களைக் குழப்புபவர்கள்

தமிழ் விளக்கம்

குழுவிலோ, குடும்பத்திலோ தன்னுடைய தொடர்பாடலினால் பிறரின் கவனத்தைத் திசை திருப்புபவர். குழுவைச் செயலற்றதாக்கும் பல செயல்களில் (இகழ்ச்சியாகப் பேசுதல் (aggressor), கருத்துக்களைத் தடை செய்தல் (blocker), அங்கீகாரம் வேண்டுதல் (Recognition Seeker), பச்சாதாபம் தேடுதல் (Self-Confessor), திசை திருப்புதல் (Disrupter/Playboy or Playgirl), ஆதிக்கம் செலுத்துதல் (Dominator), உதவி வேண்டல் (Help Seeker), ஆதாயத்திற்காக வாதிடுதல் (Special Interest Pleader) போன்ற செயல்களில் இதுவும் ஒன்று. Virginia Satir (1916 – 1988) என்ற அமெரிக்க உளப்பிணி சிகிச்சையாளர் விவரித்த ஐந்து மன அழுத்த குறைப்பிகளில், (சாந்தப்படுத்துபவர் (Placater), குற்றம் சாட்டுபவர் (Blamer), உணர்வுகளை வெளிக்காட்டாதவர் (Computer), திசை திருப்புபவர் (Distracter), சமப்படுத்துபவர் / உறுதிப்படுத்துபவர் (Leveller /Assertive) இதுவும் ஒன்று. இந்த மாதிரியான திசை திருப்புபவர்கள் பெரும்பாலும் ஆழமான புரிதலையும், நெருக்கமான உறவையும் விரும்பாதவர்களாக, அதற்கு பயப்படுபவர்களாக இருப்பர் என்று கூறுகிறார்.

English

A recurrent pattern of communication in relating to others, especially family members, characterized by evasiveness, diverting attention, bringing in irrelevant statements, changing the subject, and moving in such a way that the focus of attention is changed. The role was delineated by Virginia Satir (Peoplemaking, Palo Alto, CA: Science and Behavior Books, 1972, p. 70), who described the distracter as a person who fears the threat of close relationships and obstructs them through these diversionary tactics. Other roles are the blamer role, the computer role, and the placater role.