divorce
விவாகரத்து, மணவிலக்கு, திருமண விலக்கு, உறவு முறிதல், தொடர்பறுத்தல்
தமிழ் விளக்கம்
விவாகரத்தென்பது ஒரு திருமணத்தைச் சட்டபூர்வமாகக் கலைப்பதாகும். எதனடிப்படையில் திருமணத்தை கலைக்கலாம் என்பதற்கு ஒவ்வொரு நாடும் சட்டங்களை வகுத்துள்ளது. கூடா ஒழுக்கம் (பிறர்மனை நயத்தல் / பரஸ்திரி தொடர்பு / விபசாரம்), விபச்சாரம், ஒரு குறிப்பிட்ட காலம் வரை கூடி வாழாமை / பிரிந்திருத்தல் போன்ற காரணங்கள் விவாகரத்துப் பெற ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. தவறுகள் சுட்டிக்காட்டப்படாவிட்டாலும் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று தம்பதியினரில் ஒருவர் வேண்டினாலும் விவாகரத்து (no-fault divorce) வழங்கப்படுகின்றது.
English
The legal dissolution of a marriage. Each state establishes its own laws determining the criteria (grounds) for dissolution. Adultery, incompatibility, and living apart for specified periods of time are the grounds most commonly accepted. Many marriages are also dissolved through no-fault divorce.