DNA

டி என் ஏ, ஆங்கிலத்தில் டியோக்ஸி ரிபோ நியூக்ளிக் ஆசிட் (Deoxyribonucleic acid (DNA)) என்ற 3 வார்த்தைகளில் உள்ள முதல் 3 எழுத்துக்களைத்தான் ' டிஎன்ஏ' என்று சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்கள்

தமிழ் விளக்கம்

வளைந்து கிடக்கும் இரட்டை பட்டை ரிப்பன் போன்ற இந்த அமைப்பை வெளியில் எடுத்து நீட்டிப் பார்த்தால் அது 5 அடி நீளம் இருக்கும். டியாக்சி ரிபோநியூக்ளிக் அமிலம், உயிருள்ள செல்களில் காணப்படும் ஓர் சிக்கலான மூலக்கூறு. இதில் குறிப்பிடத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ள குரோமோசோம்களில் தான் மரபணுத் தகவல்களைத் தாங்கியிருக்கின்றது. ஃபிரான்சிஸ் கிரிக், ஜேம்ஸ் டி வாட்சன் ஆகியோர் 1953 ஆம் ஆண்டு டிஎன்ஏ வடிவமைப்பைக் கண்டறிந்து ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டனர். இதையடுத்து, இவர்கள் இருவருக்கும், மற்றொரு ஆய்வாளரான மெம்ரீஸ் வில்கின்ஸுடன் இணைந்து 1962 இல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

English

Deoxyribonucleic acid, a complex molecule found in living cells. Its components are arranged in particular sequences, the pattern of which determines the genetic information carried by the chromosomes.