domestic partners

உடனுறைபவர்கள், குறிப்பாக ஓரினச் சேர்க்கையாளர்கள், திருமணமாகாமல் ஒன்றாக வாழ்பவர்கள்

தமிழ் விளக்கம்

திருமணம் செய்து கொள்ளாமல் நிரந்தர உறவிலிருக்கும் இருவர், தன்பாலினச் சேர்க்கையாளர்களோ (gay & lesbian), மாற்றுப்பாலினச் சேர்க்கயாளர்களோ உடனுறைபவர்களாக வாழ சட்ட ரீதியாகப் பதிவு செய்துகொள்ளல். உடனுறைபவர்களாக பதிவு செய்துகொள்ளும் தம்பதியினர், திருமணமான தம்பதியர் பெரும் எல்லாச் சலுகைகளையும், எடுத்துக்காட்டாக வாடகை வரையறுக்கப்பட்ட (rent controlled) வீடுகளைப் பெற முன்னுரிமை, குடும்ப மருத்துவக் காப்பீட்டுப் பயன்கள், உயிர் வாழும் தம்பதிகளுக்கான சலுகை, போன்றவற்றைப் பெறமுடியும். திருமணமான தம்பதியினரும், உடனுறையும் தம்பதியினரும் சட்டத்தின்படி சமமாக நடத்தப்படுவர்.

English

In some jurisdictions a legal designation for those who register as cohabitating unmarried adults who intend to maintain permanent relationships. The designation was established primarily for (but is not exclusively used by) gay and lesbian partners to provide them with the same legal supports and mutual obligations that exist for married couples (such as access to rent-controlled apartments, survivors' benefits, and family health insurance programs).