Domestic Peace Corps

உள்நாட்டு அமைதிப்படை / தொண்டரணி

தமிழ் விளக்கம்

கட்டாய இராணுவப் பயிற்சி அமுலிலுள்ள நாடுகளில், அப்பயிற்சியிலிருந்து விலக்கு பெறவேண்டினால் அதற்கிணையாக சமுதாய சேவைப் பணியாற்ற வேண்டுமென்பது நடைமுறை. இவர்கள் தொண்டரணியினர் என்றோ, அமைதித் தொண்டர்கள் என்றோ அழைக்கப்படுவது வழக்கம். அமெரிக்காவிலும் கட்டாய இராணுவப் பயிற்சியோடு சம்பந்தப்படாத தொண்டரணி, அமைதிப் பணியினர் என்ற பெயரில், லின்டன் ஜான்சன் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தொடங்கப்பட்டு, கென்னடி ஜனாதிபதியானபோது செம்மைப்படுத்தப்பட்டு, கிளின்டன் காலத்தில் முறைபடுத்தப்பட்டது. ஏழைகள் மற்றும் பின்தங்கிய சமுதாயங்களுக்குச் சேவைபுரிய கிளின்டன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது 1994 இல் ஏற்படுத்தப்பட்டது அமெரிக்காவிற்கான தொண்டர் படை(Volunteers in Service to America (VISTA - Domestic Peace Corps). இத்தொண்டர்களுக்குப் பயிற்சியளித்து கிராம மற்றும் நகர்ப்புறங்களிலும், அமெரிக்க இந்தியர்கள் பயிலும் கல்வி நிலையங்களிலும், குறிப்பிட்ட இலக்கு மக்களுக்கு மருத்துவ சேவை, கல்வி, பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக நலத்திட்ட சேவைகள் வழங்கவும் இவர்களின் சேவை பயன்படுத்தப்பட்டது. இத்தொண்டர்களின் சேவைக்கு பிரதியுபகாரமாக, கல்வியும் பயிற்சியும் பிற சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

English

See Volunteers in Service to America (VISTA).