domestic violence

குடும்ப வன்முறை / குடும்பத்திலிருப்பவர்களை உபத்திரவாதம் செய்வது, குடும்பத்திலிருப்பவர்களை நெறியற்ற வழியில் கையாள்வது

தமிழ் விளக்கம்

குடும்ப வன்முறை அல்லது குடும்பத்திலிருப்பவர்களை உபத்திரவாதம் செய்வதென்பது அல்லது குடும்பத்திலிருப்பவர்களை நெறியற்ற வழியில் கையாள்வதென்பது குடுபத்திற்குள்ளோ, மணமான தம்பதியினருக்கிடையேயோ (marriage), உடனுறை தம்பதியினருக்கிடையேயோ (cohabitation), உடனிருப்பவருக்கிடையேயோ (dating partner) நடக்கலாம். இது தன் பாலின உறவு கொண்டோரிடையேயோ (same sex), மாற்றுப் பாலின உறவு உள்ளோரிடையேயோ நடக்கலாம். அத்துமீறல் என்பது உடல் (physical) உணர்வு (emotional), வார்த்தை (நிந்தித்தல், கோபத்தோடு தாக்கிப்பேசுதல், அங்கதம் செய்தல், அவமதித்தல், இகழ்தல், ஏசுதல், கடிதல், கழறுதல், சாடுதல், செண்டுபேசுதல், திட்டுதல், தூஷித்தல், நிந்தித்தல், பழிச்சொல்லிடல், புல்லற்கூறுதல், விப்பிரகாரித்தல், வைதல் (verbal), பொருளாதார (economic), பாலியல் (sexual) சார்ந்ததாகவோ இருக்கலாம். இது நுட்பமாகவோ, வலுக்கட்டாயமாகவோ, உடல் ரீதியான தாக்குதலாகவோ, உறுப்பு சீர்கெடுமளவு வன்முறை கொண்டதாகவோ இருக்கலாம்.

English

1. Abuse of children, older people, spouses, and others in the home, usually by other members of the family or other residents. 2. The social problem in which one's property, health, or life are endangered or harmed as a result of the intentional behavior of another family member.