double-entry bookkeeping
இரட்டைப் பதிவுமுறை கணக்கியல்
தமிழ் விளக்கம்
கணக்கியலில் இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை (Double-entry bookkeeping system) என்பது, வியாபார நிறுவனம் மற்றும் வியாபாரமல்லா நிறுவனங்களில் இடம்பெறும் பலவிதமான நிதி கொடுக்கல் வாங்கல் செயல்களைப் பதிவு செய்வதற்கெனப் பின்பற்றப்படும் ஒர் அடிப்படை நியம முறையாகும். நிறுவனங்களின் நிதிநிலமை, நாணய மதிப்பு, பலவகையான வர்த்தக நடவடிக்கையால் ஏற்பட்ட விளைவுகள் போன்றவற்றைக் கணிப்பதற்கு இம்முறை பெரிதும் உதவுகின்றது. இக்கணக்கு வைப்பு (bookkeeping) முறையில் ஒவ்வோர் செயலும் இரு வேறுபட்ட கணக்கேடுகளில் பதியப்படும். காரணம் நிறுவனத்தில் இடம்பெறும் ஒவ்வோர் செயலும் இருவிதமான தாக்கங்களை உண்டு பண்ணும் எனும் அடிப்படை அணுகுமுறையே ஆகும். உதாரணமாக பொருட்கள் கொள்வனவின் போது ஏற்படும் செலவுத்தொகை கொள்வனவில் வரவாகவும், அதே தொகை காசு க/கு இல் செலவாகவும் பதியப்படும். இதற்கு மறுவலத்தே விற்பனையின் போது பெறப்பட்ட தொகை காசு க/கு வரவாகவும் விற்பனை க/கு செலவாகவும் பதியப்படும். இங்கு முடிவில் மொத்த வரவு / பற்றுகள் (debit) மொத்த செலவு / கடன்களுக்குச் (credit) சமப்படும்.
English
An accounting procedure used in most social agency budget records, in which every transaction is recorded twice and the resulting increase or decrease in one account is reflected by a decrease or increase in another account.