downward mobility

இறங்கு முகம், கீழ்நோக்கிச் சரிகின்ற நிலை, கீழ்நோக்கி நகர்தல்

தமிழ் விளக்கம்

சமூகப் பொருளாதார நிலையில் தனிமனிதர்கள், குழுக்கள், மற்றும் நாடுகள் இறங்கு முகம் காணல். நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பின்னடையும்போது, வேலையின்மை, தகுதிக் குறைவான வேலை, குறைந்த ஊதியம், பணவீக்கம், இயற்கை வளங்கள் குறைதல், அரசியல் ஸ்திரமின்மை போன்ற நிலைமைகளால் மேலும் பொருளாதாரப் பின்னடைவு ஏற்படும். தனிமனிதர்கள் வாழ்வில் பின்னடைவு என்பது கல்வியைத் தொடர முடியாமை, ஆரோக்கியம் பேணமுடியாமை, இடப்பெயர்வு, இயல்பற்ற நடத்தைகளால் பொருளாதார விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவார்.

English

Socioeconomic declines by individuals, groups, or nations. In nations, this decline is due to poor economic conditions resulting in unemployment and underemployment, lower wages, inflation, diminution of natural resources, and political changes. In individuals, it is also common among dropouts and may be the result of health problems, poor planning, relocation, and other idiosyncratic factors. See also upward mobility.