dream analysis

கனவுகளை பகுத்தாய்தல்

தமிழ் விளக்கம்

கனவு (dream) என்பது ஒருவர் தூங்கும் பொழுது அவரது மனத்தில் எழும் மனப்படிமங்கள், காட்சிகள், ஓசைகள், உணர்வுகள், நிகழ்வுகளைக் குறிக்கிறது. ஒருவர் கனவு காணும் பொழுது அவரது கண்களில் அசைவுகள் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. கனவு என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு முழுமையான அறிவியல் புரிதல் இன்னும் இல்லை. மூளையில் உள்ள நினைவுக் குறிப்புகளை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் செயல்பாட்டின் விளைவாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இது அனைத்துப் பாலூட்டிகளிலும் ஏற்படக்கூடிய விளைவாகும். சிக்மண்ட் பிராய்டு (1856-1939) கனவுகளின் விளக்கம் என்ற ஆய்வை வெளியிட்ட பின், உளப்பகுப்பாய்வாளர்கள், உளப்பிணி மருத்துவர்கள், உளவள ஆலோசகர்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் கனவுகளை ஆய்வதன் மூலம் அவர்களின் ஆழ்மனத்தன்மையை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு தங்கள் சிகிச்சை முறையை மேற்கொண்டனர்.

English

A technique used in psychoanalysis and some other forms of psychotherapy and counseling in which the analyst interprets the dream content of his or her clients. Many analysts, beginning in 1900 when Sigmund Freud (1856–1939) published The Interpretation of Dreams, believed that access to the unconscious was made possible by dream analysis. The people, situations, and context in the dreams are viewed as symbols for deeper, more-underlying mental constructs. See also psychoanalytic theory.