drug abuse detection
மட்டுமீறிய போதைப்பொருள் நுகர்வைக் கண்டறிதல், போதை கண்டறிதல்
தமிழ் விளக்கம்
தங்கள் கண்காணிப்பிலுள்ளவர்கள் மீது அதிகாரம் செலுத்த உரிமை படைத்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், முதலாளிகள், தங்கள் கண்காணிப்பிலுள்ளவர்கள் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை உபயோகிக்கின்றார்களா என்று அறிந்துகொள்ள செய்யப்படும் முயற்சி. சிறுநீர் மாதிரியெடுத்தல், ஓரிடத்தில் கட்டுப்படுத்தி வைத்து போதை விலக்கத்தால் ஏற்படும் அறிகுறிகளைக் கண்டறிதல், இரகசிய விசாரணை போன்ற முயற்சிகள் இதிலடங்கும். போதைப் பழக்கமுள்ளவர்களிடம் தெரியும் அறிகுறிகளும் போதைப் பழக்கத்தைக் கண்டறிய உதவும். உதாரணமாக நீண்ட அல்லது குறுகிய கால ஞாபக மறதி, முரட்டு சுபாவம், காரணமற்று எரிச்சல்படுதல், சுறுசுறுபில்லாமலிருத்தல், கடமையைச் செய்யாமை, பள்ளி தவிர்த்தல், குறைந்த மதிப்பெண்கள் பெறுதல், எதிலும் தொடர் கவனம் செலுத்த முடியாமை, ஊசலாடும் மனம், ஆற்றலின்ன்மை, சுய கட்டுப்பாடின்மை, எதிலும் அக்கறையின்மை, சிடுசிடுப்புத் தன்மை, குடும்பத்தில் உள்ளவர்களோடு சச்சரவு, திருட்டுப் பழக்கம், தோற்றத்தில் அக்கறையின்மை, எப்போதும் சிவந்த கண்கள், நட்பில் ஸ்திரமின்மை, மேலதிகாரிகளோடு மோதல் போக்கு என்று பல அறிகுறிகளை வெளிப்படுத்துவதை வைத்தும் போதைப் பழக்கத்தைக் கண்டறியலாம். ,
English
Efforts, usually by those with certain types of authority over others (for example, parents and employers), to assess the possibility that illegal or controlled substances are being used. Such efforts include urine sampling, confinement to observe the presence of withdrawal symptoms, covert investigation, and many other activities. Experts suggest that the presence of several of the following indicators can be clues to substance abuse in youths: long- or short-term forgetfulness; aggressiveness and irritability; school tardiness, truancy, or declining grades; difficulty concentrating; reduced energy and self-discipline; uncaring or sullen behavior; constant disputes with family members; disappearance of money and valuables; unhealthy appearance, including bloodshot eyes; changes in and evasiveness about friendships; and trouble with the authorities.