drug addiction
மருந்துக்கடிமை, மருந்தடிமை, போதைப்பழக்கம், உளமயக்க மருந்தின்றி வாழ இயலா நிலையடைதல், மருந்துப்பழக்க அடிமைத்தனம், வெளிமயக்கப் பொருட்களுக்கு அடிமையாதல்
தமிழ் விளக்கம்
ஒரு மருந்துப் பொருளின் தவறான அல்லது தொடர்ச்சியான உபயோகத்தினால், அந்தப் பொருள்மீது உடலியல் ரீதியான சார்புத்தன்மை உருவாகி, இயல்பான உடலியக்கத்திற்கு அந்தப்பொருள் தேவை என்ற நிலை உருவாகி, அந்தப்பொருளின் உபயோகத்தை நிறுத்தும்போது உடல் மற்றும் உளரீதியான நலமின்மை, வாழ்க்கை நலக்குறைவு, மன உளைச்சல், ஏற்படும் நிலையை மருந்துக்கடிமையாதல் என்கிறோம்.
English
The abuse of chemical substances that results in a physiological dependence in which the body tissues require the substance to function comfortably. In the absence of the substance, the individual experiences withdrawal symptoms. See also substance dependence.