Drug Enforcement Administration, U.S. (DEA)
அமெரிக்காவின் போதை மருந்துத் தடுப்பு அமலாக்க பிரிவு, போதைப்பொருள் தடுப்பு அமலாக்க பிரிவு
தமிழ் விளக்கம்
அமெரிக்க நீதித் துறையின் கீழ் செயல்படும் போதைப் பொருள் தடுப்பு அமலாக்க பிரிவு, அமெரிக்காவில் போதை மருந்துகளின் பயன்பாடு, போதைப் பொருள் கடத்தல் போன்ற செயல்களைக் கண்காணிக்க, கட்டுப்படுத்த அதிகாரமுள்ள நிறுவனம். இது அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புடனும் (FBI), குடியேற்றம் மற்றும் சுங்கத் துறையுடனும் இணைந்து செயல்படுகிறது. போதை மருந்துப் பொருள் கண்காணிப்பதில் அமெரிக்க நாட்டிற்குள் மட்டுமல்ல, தேவைப்படின் அயல்நாடுகளிலும் புலனாய்வை மேற்கொள்ளும் அதிகாரம் படைத்தது.
English
A unit of the U.S. Department of Justice charged with enforcing the regulations that apply to controlled substances. DEA is responsible for overseeing and managing the legal production and use of narcotics, amphetamines, and barbiturates handled by pharmacists, physicians, and hospitals.