drug-free zone
போதைப்பொருள் உபயோகம் தடைசெய்யப்பட்ட மண்டலம் / பகுதி
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்துதல், விற்பனை, சந்தைப்படுத்தல், முகவர்கள் ஆட்சேர்ப்பு செய்தல் போன்ற காரியங்களைச் செய்யலாகாது என்று காவல்துறை, அரசுத்துறை அதிகாரிகள், குடியிருப்பவர்கள் மற்றும் சமூக அக்கறையுள்ளவர்கள் எல்லை குறித்திருக்கும் பகுதி. இந்தமாதிரியான தடைசெய்யப்பட்ட பகுதிகள் பெரும்பாலும் கல்வி நிலையங்களை ஒட்டியும், பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்களைச் சுற்றியும், போதை மருந்து உபயோகித்துப் பிரச்சனைகளை எதிர்கொண்ட குடியிருப்புகளுக்கு அருகேயும் இருப்பதுண்டு. இந்தத் தடை / கட்டுப்பாடு கூடுதல் காவலர்களாலும், பொதுமக்கள் கண்காணிப்பாலும் கொண்டு செலுத்தப்படுகின்றது.
English
An area designated by police, public officials, residents, or concerned citizens as being off limits for any drug use, sales, purchases, marketing, or recruiting of dealers. These areas are most commonly located on school grounds or adjacent properties; in or near recreation centers and parks; and in some residential neighborhoods, especially where drug problems have existed previously. Enforcement occurs through extra police and citizen vigilance.