drug intoxication

சாராய மிகைப்பு, சாராய ஏற்றம், போதை மயக்கம், மதுசாரத்தால் வெறிகொள்ளல், இலாகரி போதை, போதை பிரமாத்தியம், போதை மதர்ப்பு, பிரமத்தம்

தமிழ் விளக்கம்

உளவெழுச்சி / உள மடக்கி மருந்துகளைத் தொடர்ந்தோ அல்லது அளவுக்கதிகமாகவோ பயன்படுத்தும் போது ஏற்படும் இணக்கமற்ற நடத்தை. ஒவ்வொரு மருந்தும் அதற்கே உரிய உன்மத்தம் அல்லது வெறி / மயக்க நிலையை ஏற்படுத்தும். சரியான முடிவெடுக்க இயலாமை, வலுச்ச்சண்டையிழுத்தல், சமூகச் செயல்பாடு மற்றும் வேலையில் திறணிழத்தல், மனக்கவலை, மனக்களிப்பு, உணர்விழத்தல் (coma) மற்றும் இறப்பு போன்ற விளைவுகளை உருவாக்கும்.

English

Maladaptive behavior and other symptoms specific to the particular psychoactive substance recently taken. These symptoms may include impaired judgment, belligerence, impaired social functioning, occupational problems, depression, euphoria, coma, and death.