drug testing

போதை மருந்துச் சோதனை

தமிழ் விளக்கம்

தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை உபயோகித்திருக்கின்றார்களா என்பதைக் கண்டறிய முறைப்படி செய்யப்படும் சோதனை முறைகள். இதற்கு சிறுநீர், இரத்தம், எச்சில், மயிர் மாதிரிகளை எடுத்துச்ச சோதித்தறியலாம். இந்தச் சோதனைகள் கோகைண், பிசிபி (PCP), ஆம்பிட்டாமைன் (amphetamines), பார்பிட்டுரேட் (barbiturates), மற்றும் ஹெராய்ன் (heroin) போன்ற மருந்துகள் உட்கொண்டிருந்தால் அதை ஒரு வாரத்திற்குள்ளும், கஞ்சா உபயோகத்தை 21 நாட்களுக்குள்ளும் கண்டறியலாம். உபயோகப்படுத்தியது மாதிரி சோதனையில் தெரிந்தால், மறுமுறை சோதித்து உறுதிப்படுத்திக்கொள்வார்கள். கவனக்குறைவினால் அங்ககீனம் ஏற்பட வாய்ப்புள்ள தொழிலகங்களில் பணியாளர்கள் தொடர்ச்சியான கால இடைவெளிகளில் போதை மருந்துச் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

English

The systematic procedure for determining an individual's abuse of illicit drugs. Urinalysis is the most common procedure used, although analyzing samples of hair, blood, and saliva can also reveal drug use. These tests can detect the use of cocaine, PCP, amphetamines, barbiturates, and heroin taken within the past two to seven days. Marijuana can be detected over longer periods, up to 21 days. Because the tests are often inaccurate, the standard procedure for most employers is to conduct a second test on those employees whose first tests are positive. The second test, using a more-reliable procedure, is nearly always accurate. Drug testing is part of most drug treatment programs, designed to help motivate and strengthen the determination of the patient. Drug testing is increasingly required in the workplace, especially in those settings where impairment by workers can jeopardize others.