drugs of abuse

போதைக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகள்

தமிழ் விளக்கம்

உள இயக்கி / உளவெழுச்சி / உளமடக்கி மருந்துகள் என்பது உபயோகிப்பாளர்களுக்கு உடனடி இன்பத்தையும், மனநிறைவுணர்ச்சியையும் தந்தாலும், காலப்போக்கில் தீங்கு விளைவிக்கக்கூடிய தன்மை படைத்தவை. இவற்றில் பெரும்பாலான மருந்துகளின் உபயோகம் சட்டவிரோதமானவை. எல்லா மருந்துகளும் பழக்கமுண்டாக்கிகள் மட்டுமல்ல அதை நிறுத்தும் போது நலமின்மையையும், மன உளைச்சலையும் தரக்கூடியவை. ஒபியம், ஹெராய்ன், கோகைன், தற்காலிகமாக மூளையைச் சுறுசுறுப்பாக்கி, களைப்பைப் போக்கும் amphetamines, sympathomimetics, phencyclidine hydrochloride (PCP) மருந்துகள், பிரமிப்பூட்டிகள், களிப்பிகள் போன்றவையெல்லாம் தடை செய்யப்பட்ட மருந்துகளாகும். மது, மயக்கிகள், நிகோடின், காபின், உறிஞ்சிகள் (gluelike substances that are inhaled) போன்றவை தடைசெய்யபடாவிட்டாலும், இதுவும் பழக்கடிமைக்கு கொண்டு சென்று ஆரோக்கியக் கேட்டை விளைவிக்கும்.

English

Psychoactive substances that typically are used to produce, in the user, some sense of immediate pleasure or gratification, followed by long-term deleterious consequences. Most of these drugs are illegal, and all of them lead to habituation and withdrawal symptoms. The illegal drugs of abuse include opioids (including heroin), cocaine, amphetamines or similarly acting sympathomimetics, phencyclidine hydrochloride (PCP) or similarly acting arylcyclohexylamines, hallucinogens such as LSD, and cannabis (marijuana). Other psychoactive substances that are not illegal but have led to widespread abuse include alcohol, sedatives, nicotine, caffeine, and gluelike substances that are inhaled. See also opioid abuse.