DSM-IV
மன நோய்களைக் கண்டறிய உதவும் புள்ளி விபரக் கையேடு, நான்காம் பதிப்பு
தமிழ் விளக்கம்
உலகத்தில் உள்ள நோய்களை எல்லாம் கண்டு, வகைப்படுத்தி, வரிசைப்படுத்தி அட்டவணைப்படுத்தியுள்ளார்கள். இப்படி அட்டவணைப்படுத்திய வியாதிகள்தான் அங்கீகரிக்கப்பட்டவை ஆகும். இதற்கு நோய்களின் பன்னாட்டு வகுப்பொழுங்கு (International classification of diseases) என்று பெயர். அடிக்கடி புதிய ஆராய்ச்சிகளின், கண்டுபிடிப்புகளின் ஆதாரங்களின் அடிப்படையில் திருத்தங்கள் செய்து சீராக்குவார்கள். இதை உலக சுகாதார நிறுவனம் செய்து வருகிறது. ஐரோப்பாவிலும் நம் நாடுகளிலும் இதுவே பின்பற்றப்படுகிது. இது மாதிரி மனநோய்களுக்கான அமெரிக்க அமைப்பு, மனநோய்களை அட்டவனைப்படுத்தியுள்ளது. மன நோய்களைக் குறிக்க ஐந்து குறியீடுகள் கையாளப்படுகின்றன. 1.சில நோய்கள் மன நோய்களாக இல்லாவிட்டாலும் சிகிச்சை தேவைப்படுபவை. 2. ஆளுமை சார்ந்த, மனவளர்ச்ச்சி குறைவு பட்ட கோளாறுகள். 3. நோயாளியின் உடல் உபாதைகள் தொடர்புடைய குறிகள். 4. நோயாளியின் உள சமூகப் பிரச்சனைகள் மற்றும் சுற்றுச் சூழல் சார்ந்த பிரச்சனைகள். 5. அளவுகோல் வயதிற்கு வந்தவர்களின் சமூக, தொழில்சார், உளவியல் செயல்பாட்டையும், அவர்கள் தங்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கின்றார்கள் என்பதை அறிய உதவும் எண்கள் சார்ந்த (0 முதல் 100 வரை) உலகளாவிய மதிப்பீடு (Global Assessment of Function (GAF) Scale) அளவுகோல். மனவியாதிகள் நான்காம் பதிப்பில் கலாச்சாரம் சார்ந்த மன வியாதிகளும் பட்டியலிடப்பட்டு அதற்கான குறியீடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
உலக சுகாதார நிறுவனம் பொதுவியாதிகளுக்கான பட்டியலின் பத்தாவது பதிப்பை 1992ல் வெளியிட்டது. இதன் 11வது பதிப்புக்கான திருத்தங்கள் தற்போது செய்யப்பட்டும் பிரசுரிக்கப்பட இருக்கின்றது. இது முழு அளவில் 2015 ல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வகைப்பாடு மனக்கோளாறுகளை மட்டுமின்றி சகல வியாதிகளையும் உள்ளடக்கியது. இந்த ஆவணத்தில் 300 க்கு அதிகமான மனக்கோளாறுகள் பட்டியலிடப் பட்டிருக்கிறன. இதே போல, வட அமெரிக்காவில் DSM5 (2013) என்ற வகைப்பாடு பாவிக்கப்படுகிறது. இவை இரண்டுக்கும் இடையே பெரும் வித்தியாசம் இல்லை.
உலக சுகாதார நிறுவனம் பொதுவியாதிகளுக்கான பட்டியலின் பத்தாவது பதிப்பை 1992ல் வெளியிட்டது. இதன் 11வது பதிப்புக்கான திருத்தங்கள் தற்போது செய்யப்பட்டும் பிரசுரிக்கப்பட இருக்கின்றது. இது முழு அளவில் 2015 ல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வகைப்பாடு மனக்கோளாறுகளை மட்டுமின்றி சகல வியாதிகளையும் உள்ளடக்கியது. இந்த ஆவணத்தில் 300 க்கு அதிகமான மனக்கோளாறுகள் பட்டியலிடப் பட்டிருக்கிறன. இதே போல, வட அமெரிக்காவில் DSM5 (2013) என்ற வகைப்பாடு பாவிக்கப்படுகிறது. இவை இரண்டுக்கும் இடையே பெரும் வித்தியாசம் இல்லை.
English
The fourth and current edition of psychiatry’s official classification of mental disorders and the symptoms and characteristics found in each. Published by the American Psychiatric Association in 1994, the DSM-IV labels each disorder and provides a numerical code and systematic criteria for distinguishing it from other mental disorders. DSM-IV calls for the subject to be evaluated on each of five levels or axes. Axis I disorders include clinical syndromes as well as certain conditions that are not caused by mental illness but are the focus of attention or treatment. Axis II disorders are the personality disorders and mental retardation. Axis III is used for the subject's relevant physical diseases and conditions. Axis IV is for the subject's psychosocial and environmental problems, and in Axis V the clinician uses a Global Assessment of Functioning (GAF) Scale. The DSM-IV also describes culture-bound syndromes, lists proposed classifications of mental disorders, and has a section coordinating its coding of mental disorders with those listed in the International Classification of Diseases (ICD). Definitions of mental disorders in this dictionary are consistent with those in DSM-IV.